ஜனாதிபதி, பிரதமா் மீது குற்றச்சாட்டு - வாசுவே
ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் காணப்படுகின்ற தனிப்பட்ட பிரச்சி னைகளை தீர்ப்பதற்கு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகா ரங்களை பயன்படுத்திக் கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளாா்.
அரசியல் வரலாற்றிலே முதல் முறையாக ஜனாதிபதி கருத்து முரண்பாடுகளை காரணம் காட்டி அமைச்சரவை கூட்டம் கூட்டாமல் நிறைவேற்று அதிகாரத்தை பயன் படுத்துகின்றார். பிரதமரும் அவரது சகாக்களும் தொடர்ந்து ஜனாதிபதி யுடன் முரண்பட்டுக் கொண்டிருந்தால் அரசியல் நெருக்கடி மேலும் தீவிர மடையும்.
தற்போதைய பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்தே ஒரு தீர்வு காணவேண்டும். ஆனால் நடைமுறையில் இது சாத்தியப்படவில்லை. இரண்டு தரப்பினருக்கும் இடையில் காணப்படுகின்ற தனிப்பட்ட பிரச்சினை களை தீர்த்துக் கொள்ள இவர்கள் அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.
இருவரும் இணைந்து செயற்பட வேண்டும் முடியாவிடின் பதவி விலகி முன் கூட்டியே தேர்தல்களை நடத்தி ஒரு நிலையான அரசாங்கத்தை உருவாக்க இடமளிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.