இலங்கைக்கு விஜயமாகவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர்.!
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ (Mike Pompeo), இந்த மாதத்தின் இறுதிப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை அவர் இலங்கை விஜயத் தில் ஈடுபடவுள்ளதாக, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் டுவிட் டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள் ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலா ளர் இந்த நாட்களில் இந்தியா, இலங்கை, ஜப்பான் மற்றும் கொரியா வுக்கு விஜயம் மேற்கொள்ளவுள் ளார்.
சுதந்திரமான திறந்த இந்திய பசுபிக் வலயத்தை உருவாக்கும் நோக்குடன் இந்த விஜயத்தில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வௌியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரமான திறந்த இந்திய பசுபிக் வலயத்தை உருவாக்கும் நோக்குடன் இந்த விஜயத்தில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வௌியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.