ஈரான் மீது புதிய தடைகளை விதிக்கும் அமெரிக்கா
ஈரான் மீது கடுமையான புதிய தடைகளை விதிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனா திபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ஈரானின் சிரேஷ்ட தலை வரான அயதுல்லா அலி கமெய்னி மீதும் தடை விதிப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமை உள்ளிட்ட பல விடயங்களுக்கு பதி லாக இத் தடை அமுல்படுத்தப்படுவ தாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஈரானின் சிரேஷ்ட தலைவரான அயதுல்லா அல் கமெய்னி பகை நடவடிக்கை களுக்கு முழு பொறுப்பானவர் என்பதால் அவருக்கு எதிராகவும் தடை விதிக் கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஈரானினுக்கு எதிரான தடை காரணமாக அந்நாடு பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை இழக்க நேரிடும் என அமெரிக்க நிதி செயலாளர் ஸ்டீவ் னுச்சின் தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளுடனான ஈரானின் அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகியதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான பதற்றநிலை அதிகரித்துள்ளது.
இதேவேளை, அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்றை ஈரான் சமீபத் தில் சுட்டு வீழத்தியதை தொடர்ந்து பதற்றம் வலுப்பெற்றுள்ளது. அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ள நிலையில் சர்வதேச கூட்டணி ஒன்றுக்கு அழைப்பு விடுக்கக்கூடும் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளாா்.
இதேவேளை, தமது வான் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்தால் மேலும் பல அமெரிக்க உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும் என ஈரானிய கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.