பதவி விலகல் கடிதங்கள் செல்லுபடியற்றவை - டிலான்
கூட்டாக பதவி விலகினாலும் தனித்தனி பதவி விலகல் கடிதங்களை கைய ளித்திருக்க வேண்டும். கூட்டாக கையெழுத்திட்டு கொடுத்த கடிதம் செல்லு படியற்றது என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளாா்.
பொரளையில் பாராளுமன்ற உறுப்பி னர் திலங்க சுமதிபாலவினுடைய அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
குற் றஞ்சாட்டப்படாமல் பதவி விலகி யுள்ள அமைச்சர்கள் குற்றஞ் சாட்டப் பட்டவரை பாதுகாப்பதற்காக பதவி விலகினார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி விடக் கூடாது.
கத்தோலிக்க மக்களை இலக்கு வைத்து தேவாலயங்களில் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் பலியான போது, இடம்பெற விருந்த பாரியதொரு வன்முறையை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தடுத்தி நிறுத்தி மிகவும் பொறுமையுடன் செயற்பட்டார்.
அன்று தடுத்து நிறுத்தப்பட்ட வன்முறை தற்போது இடம்பெறுவதற்கு இடம ளிக்கப்படக் கூடாது. இதனை பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் கவனத் திலெடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.