தீர்வை வழங்கும் திட்டம் ஜனாதிபதியிடம் இல்லை - மாவை
ஜனாதிபதியும்,பிரதமரும் ஓரணியாக இணைந்து தமிழர் தரப்பின் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளாா்.
ஜனாதிபதி, - பிரதமர் ஆகியோருக்கு இடையிலான முரண்பாடுகள் காரணமாக தமிழ் மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழ் மக்க ளின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வாய்ப்புகள் அனைத்துமே தட்டிப்பறிக்கப்படுகின்றன.
அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா காரணத்தினாலேயே தொடர்ந்தும் நாம் சர்வதேச தரப்பை நம்பியிருக்க வேண்டியுள்ளது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து நாம் தொடர்ச்சியாக அரச தரப்புக்கும் சர்வதேச தரப்புக்கும் அழுத்தம் கொடுத்து வருகின்றோம். எமக்கு கிடைத்த சகல வாய்ப்புகளையும் எமது மக்களுக்கு சார்பாக பயன்படுத்திக்கொள்ளவே நாம் முயற்சித்து வருகின்றோம்.
அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வேளையில் நாம் அவருடன் சந்திப்பை மேற்கொண்டு எமது மக்க ளின் நீண்டகால பிரச்சினைக்களுக்கு நிரந்தரமான தீர்வுகள் வேண்டும் என்பதையே வலியுறுத்தினோம். சர்வதேச தலையீடுகள் மற்றும் ஒத்துழைப்புகள் இல்லாது எம்மால் தீர்வை நோக்கி பயணிக்க முடியாது.
ஆகவே தான் நாம் தொடர்ந்தும் சர்வதேச தரப்பை நம்பி செயற்பட்டு வருகின் றோம். இந்த ஆட்சியை உருவாக்கியபோது ஜனாதிபதி - பிரதமர் இருவர் மீதும் அதிக நம்பிக்கை வைத்தது தமிழர் தரப்பேயாகும்.
புதிய அரசியல் அமைப்பு ஒன்றினை உருவாக்கி அதன் மூலமாக தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்ற எண்ணம் இருந்தது. அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கவும்பட்டன.
இனப்பிரச்சினைகான தீர்வுகள் எட்டப்படும் வாய்ப்புகள் உருவாகி வந்த நேரத் தில் இடை நடுவே ஜனாதிபதி மேற்கொண்ட சில தவறான செயற்பாடுகள் காரணமாக தமிழ் மக்களின் தீர்வு குறித்த முயற்சிகள் குழப்பப்பட்டன. ஜனாதிபதிக்கோ அல்லது அவருடன் இன்று இணைந்துள்ள சக்திகளுக்கோ தமிழர் விட யத்தில் தீர்வுகளை பெற்றுகொடுக்கும் நோக்கம் இல்லை.
அவர்களுக்கு இந்த நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி சிறுபான்மை மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ளும் முயற்சிகளை தடுக்க வேண்டும் என்ற நோக்கமே உள்ளதாக அவர்களின் செயற்பாடுகள் மூலம் தெரிகின்றன. எனி னும் தொடர்ந்தும் இவ்வாறு அநாவசியமாக பிரச்சினைகளை தூண்டிவிட்டு அதன் மூலம் தமிழர்களின் தீர்வுகளை குழப்பக்கூடாது.
இன்று முஸ்லிம் அமைச்சர்கள் குறித்த விடயம் குறித்து பிரதான கட்சிகள் அக்கறை செலுத்திவருகின்றன. முஸ்லிம் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை அவர்களே நிருபிக்க வேண்டும். இந்த விடயங்களில் சர்வதேச சக்திகளின் தலையீடுகள் உருவாகி இன்று பிரச்சினை வேறு திசைக்கு கொண்டுசெல்லப்படுகின்றன. தமிழர் விவகாரங்களில் முதலில் தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களை காரணமாக வைத்துகொண்டு ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்ற கருத்துக்கள் உள்ளன. அதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் தேர்தலை நடத்த முன்னர் முத லில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வும் ஒரு அணியாக ஒன்றிணைந்து முதலில் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
கொடுத்த வாக்குறுதிகளுக்கு அமைய முதலில் புதிய அரசியலமைப்பினை உருவாக்கி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இதனை செய்து முடித்தால் இன்று நாட்டில் இடம்பெற்று வருகின்ற சகல பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு கிடைக்கும்.
ஆகவே அடிப்படை குழப்பம் எங்கு உள்ளது என்பதை ஜனாதிபதியும் பிரதம ரும் முதலில் தெரிந்துகொண்டு தீர்வுகளை நோக்கி பயணிக்க வேண்டும் என தமிழர் தரப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்கால அரசியல் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளாா்.