இலங்கையுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி.!
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப் பட்ட அவுஸ்திரேலியா சார்பாக டேவிட்வோனர் மற்றும் அணித் தலைவர் ஏரோன் பிஞ்ச் ஜோடி முதல் விக்கெட்டுக்காக 16.4 ஓவர்களில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்தது.
அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் ஏரோன் பிஞ்ச் தனது 14 ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தை எட்டினார். 132 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 சிக்ஸர்கள், 15 பௌண் டரிகளுடன் 153 ஓட்டங்களை குவித்தார்.
ஏரோன் பிஞ்ச் – ஸ்டீவன் ஸ்மித் ஜோடி மூன்றாம் விக்கெட்டுக்காக 20 ஓவர்க ளில் 173 ஓட்டங்களைப் பகிர்ந்தது. ஸ்டீவன் ஸ்மித் 59 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பௌண்டரிகளுடன் 73 ஓட்டங்களைப் பெற்றார்.
இறுதிவரை ஆட்டமிழக்காதிருந்த கிளன் மெக்ஸ்வெல் 25 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பௌண்டரிகளுடன் 46 ஓட்டங்களைப் பெற்றார். அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 334 ஓட்டங்களைக் குவித்தது.
பந்துவீச்சில் இசுரு உதான, தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 2 விக் கெட் களை கைப்பற்றினார். கடின இலக்கான 335 ஓட்டங்களை நோக்கி பதிலளித் தாடிய இலங்கை அணிக்கு குசல் ஜனித் பெரேரா – திமுத் கருணாரத்ன ஜோடி சிறந்த ஆரம்பத்தை இட்டது.
இவர்கள் முதல் 10 ஓவர்களில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இது இவ்வருட உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் முதல் பவர் பிளேயில் ஓர் அணி பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.
15.3 ஓவர்களில் 115 ஓட்டங்களைப் பகிரப்பட்ட நிலையில் முதல் விக்கெட்டாக குசல் ஜனித் பெரேரா 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 36 பந்துகளை எதிர் கொண்ட அவர் ஒரு சிக்ஸர், 5 பௌண்டரிகளை விளாசினார்.
லஹிரு திரிமான்ன 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி 23.5 ஓவர்களில் 153 ஓட்டங்களுக்கு இரண்டாவது விக்கெட்டை இழந்தது. சிறப் பாகத் துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தனது நான்காவது சர்வதேச ஒருநாள் அரைச்சதத்தை கடந்து 97 ஓட்டங்களைப் பெற்றார்.
எனினும், மத்திய வரிசை வீரர்களின் பொறுப்பற்ற துடுப்பாட்டம் இலங்கை அணியை மீண்டும் தோல்வியடைய செய்தது. ஏஞ்சலோ மெத்யூஸ், மிலிந்த சிறிவர்தன, திசர பெரேரா,இசுரு உதான ஆகியோர் சொற்ப ஓட்டங்களுடனும் குசல் மெண்டிஸ் 30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணி 45.5 ஓவர்களில் 247 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க் 4 விக்கெட்களையும் கேன் ரிச்சர்ட் ஸன் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் போட்டியின் பின்னர் நடாத்தப்படும் உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் மாநாட்டில் எந்தவொரு இலங்கை வீரரோ அல்லது பயிற்றுவிப்பாளரோ கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.