Breaking News

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சஹ்­ரா­னுடன் எந்­த­ ஒப்­பந்­தங்­க­ளையும் செய்­ய­வில்லை: யு.எல்.எம்.என்.முபீன்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சஹ்­ரா­னுடன் எவ்­வித ஒப்­பந்­தங்­க­ளையும் செய்ய­வில்லை என காங்­கி­ரஸின் காத்­தான்­குடி பிர­தான அமைப்­பாளர் யு.எல். எம்.என்.முபீன் தெரி­வித்துள்ளாா். 

மேலும் தெரி­விக்­கையில்,



தற்­கொலைக் குண்­டு­தாரி சஹ்­ரா­னு டன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஒப்­பந்தம் செய்­த­தாக பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவில் சாட்­சி­ய­மளித்த முன்னால் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்­துள்­ள­தாக பொது­ஜன பெர­முன கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரோஹித்த அபே­கு­ண­வர்­தன ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­துள்ளார்.

மேற்­படி எந்த ஒப்­பந்­தத்­தையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சஹ்­ரா­னுடன் செய்­தது என்­பதை முற்­றாக நிரா­க­ரிப்­ப­தா­கவும் அதனை மறுப்­ப­தா­கவும் குறிப்­பிட்டார். கடந்த 2015 பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்­பாக காத்­தான்­குடி பிர­தே­சத்தில் பிர­தான செயற்­பாட்­டா­ள­ராக நானே செயற்­பட்­டி­ருந்தேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தொடர்­பி­லான தேர்தல் செயற்­பா­டு­க­ளுக்கு பொறுப்­பா­கவும் இருந்தேன். அந்த தேர்­தலில் நான் போட்­டி­யி­ட­வில்லை. காங்­கிரஸ் சார்­பாக இருவர் போட்­டி­யிட்­டனர். அதி­லொ­ருவர் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி சார்­பா­கவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்­பாக மற்­றொ­ருவரும் போட்­டி­யிட்­டனர்.

அவர்கள் தனிப்­பட்ட ரீதி­யாக சஹ்­ரா­னுடன் ஒப்­பந்­தத்­துக்கு சென்­றி­ருக்­கலாம். அது தொடர்பில் கட்­சியின் அமைப்­பா­ள­ரான எனக்கோ அல்­லது கட்­சியின் தலை­மைக்கோ தெரி­யாது. இத்­த­கைய ஒப்­பந்­தங்­களில் யாரா­வது ஈடு­பட்­டி­ருந் தால் அவர்­களே பொறுப்­பேற்க வேண்­டுமே தவிர கட்சி அதனை பொறுப்­பேற்­காது எனத் தெரிவித்துள்ளாா்.