அபிவிருத்திக்குழுச் சந்திப்பில் தனியார் ஊடகங்களை வெளியேறுமாறு வடக்கு ஆளுநர்
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்துக்குழு கூட்டம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
குழுவின் இணைத்தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன், மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றுவரும் இச் சந்திப்பில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஊடகவியலாளர்களை பார்த்து ஆளுநர் சுரேன் இராகவன் தனியார் ஊடகங்கள் யார் என கேட்டு தனியார் ஊடகங்களை வெளியேறு மாறும், பின்னர் கூட்ட தீர்மானங்களை வழங்குவதாகவும் அரச ஊடகங்கள் மட்டும் இருக்குமாறும் தெரிவித்துள்ளாா்.
இது அரச கூட்டம் அரச விடயங்கள் பற்றி மக்கள் பிரதிநிதிகளுடன் அரசு ஊழி யர்கள் கலந்துரையாடும் விடயம் எனவும் ஊடகங்கள் இருக்கத்தேவை யில்லை எனவும் தனியார் ஊடகங்களை வெளியேறுமாறு பணித்துள்ளாா்.
இதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இது வரை காலமும் ஊடகங்களின் முன்னிலையில் தான் இச் சந்திப்பு நடை பெற் றது .அந்த வழமையை மாற்றவேண்டாம் ,மற்றும் அரசாங்க ஊடகங்களை அனுமதித்து தனியார் ஊடகங்களை வெளியேறவேண்டும் என கூறுவது பொருத்தமல்ல எனத் தெரிவித்துள்ளாா்.
இதன்போது குறுக்கிட்ட ஆளுநர் அப்படியானால் அனைத்து ஊடகங்களையும் வெளியேற்றுவோம் என தெரிவித்தார். இடையில் குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஊடகங்கள் அனுமதிக்கப்படவேண்டும் அவ் வாறு வெளியில் அனுப்ப முடியாது ,ஊடகங்களுக்கு பயப்பட வேண்டிய தேவையில்லை.
இந்த அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நடைபெறும் விடயங்களை மக்கள் அறிய வேண்டும் நாங்கள் என்ன பேசுகின்றோம் என்பதை மக்கள் அறிய வேண்டுமெனத் தெரிவித்த போது மீண்டும் சிவசக்தி ஆனதன் எம் பி 19ஆவது திருத்த சட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஒவ்வொருவருக்கும் தகவல் அறியும் உரிமை இருக்கின்றது. என தெரிவித் தார். இடையில் குறுக்கிட்ட ஆளுநர் சிவசக்தி ஆனதன் எம் பியிடம் ஆம் அவ்வாறு சட்டம் இருக்கின்றது உண்மை ஆனால் ஒவ்வொரு கூட் டத்தையும் ஒவ்வொரு பேச்சுவார்தையையும் அறிய வேண்டும் என இருக்கின்றதா என கேட்டார் ??
அதற்கு பதிலழித்த சிவசக்தி ஆனந்தன் ஆம் கட்டாயம் அவ்வாறு அறிய வேண்டும் இங்கே நடைபெறும் விடயங்களை இங்கே பேசப்படும் விடயங் களை இந்த மாவட்டத்தின் மக்கள் அறியவேண்டும், அந்த மக்களுக்கு அது தெரியவேண்டும், நாங்கள் இந்த மாவட்டத்தின் அபிவிருத்தியை பற்றித்தான் பேசுகின்றோம், வேற ஒருவிடயங்களை பற்றியும் பேசவில்லை.
எனவே இந்த விடயங்களை மக்கள் அறியவேண்டும் ஆகவே ஊடகங்களை அனுமதியுங்கள் .இந்த அரசாங்கத்தில் வெளிப்படை தன்மை இருக்க வேண் டும் ,தகவல் அறியும் உரிமை எல்லோருக்கும் இருக்கின்றது . இந்த நிலையில் தனியார் ஊடகங்களை மட்டும் வெளியேற்றுவது தவறானது என தெரிவித் துள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த ஆளுநர் நான் ஊடக எதிர்ப்பாளன் அல்ல இங்கே நடைபெறும் விடயங்களை நான் பார்வையிடுகின்றேன் நீங்கள் கூட்டத்தை நடத்துங்கள் நான் ஊடகங்களுக்கு பேச வரவில்லை என தெரிவித்துவிட்டு அமர்ந்துகொண்டார் . இதனால் சிறிதுநேரம் அமளிதுமளி ஏற்பட்டது . தொடர்ந் தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் விவாதங்களையடுத்து ஊடகங்கள் தமது பணியை தொடர்ந்துள்ளனா்.