ஜனாதிபதி வேட்பாளராக கோத்தா?
முன்னால் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கத் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
இந் நிலையில் நேற்றைய தினம் பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதியாக போட்டியிடும் வேட் பாளரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டின் போது எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அறிவிப் பார் என அக் கட்சியின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.