மாணவா்களுக்கு கைக்கணினி வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் தீா்வு என்ன?.!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பில் மிதக்கும் மின்சார கப்பல் தொடர்பிலும் மாணவர்களுக்கு கைக்கணினி வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டபோதிலும் இறுதி முடிவு கிடைக்கவில்லை.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுக்காலை அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது மிதக்கும் மின்சார கப்பலை கொழும்பு துறைமுகத்தை ஒட்டியபகுதியில் நிறுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்துள்ளாா்.
மிதக்கும் மின்சாரக் கப்பலை கெரவலப்பிட்டி கடற்கரைப்பகுதியில் நிறுத்த முடியாது. அங்கு கடல் அலை அதிகமாக உள்ளமையினால் அதற்கான் சாத்தியமில்லை. எனவே கொழும்பு துறைமுகத்தை ஒட்டியப்பகுதியில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க வலியுறுத்தியுள்ளாா்.
இதன்போது கருத்து தெரிவித்த துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் சாகல ரட்னாயக்க கொழும்பு துறைமுகத்தை அண்டியபகுதியில் மிதக்கும் மின்சாரக் கப்பலை நிறுத்தவேண்டுமானால் அது தொடர்பில் என்னுடன் இதுவரை கலந்துரையாடப்படவில்லை.
கப்பலின் நீளம், உயரம், அகலம் தொடர்பிலோ அல்லது அதன் செயற்பாடுகள் குறித்தோ எனக்கு எதுவுமே தெரியாது. அவ்வாறு இருக்கையில் எவ்வாறு துறைமுகப்பகுதியில் கப்பலை நிறுத்துவதற்கு அனுமதிக்க முடியும்.
இக் கப்பலை அப்பகுதியில் நிறுத்தினால் வேறு கப்பல்கள் நங்கூரமிடுவதற்கு அப்பகுதியை நாம் பயன்படுத்த முடியாது. எனவே இந்த செயற்பாட்டிற்கு அனு மதிக்க முடியாது. என்று சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்து இரு அமைச்சர்களுக்குமிடையில் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.
இரண்டு அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் ஒன்றிணைந்து கலந்துரையாடி ஓர் இணக்கப்பாட்டிற்கு வந்ததன் பின்னர் அடுத்தவாரம் இந்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறும் அப்போது இவ்விடயம் தொடர்பில் தீர்மானம் ஒன்றுக்கு வருவோம் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளாா்.
கைக்கணனி விவகாரம் இதேவேளை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உயர்தர மாணவர்களுக்கு கைக்கணணி வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை மீண்டும் சமர்ப்பித்துள்ளார்.
நீண்டகாலமாக இழுபறி நிலையில் இருந்த பத்திரத்தை சமர்ப்பித்த அமைச்சர் முதற்கட்டமாக நாட்டிலுள்ள 375 தேசிய பாடசாலை மாணவர்களுக்கு இதனை வழங்குவதற்கான அனுமதியினை தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தற்போதைய நிலையில் டொலரின் விலை அதிகரித்துள்ளமையினால் இந்தத் திட்டத்திற்கு மேலதிகமாக 2000 மில்லியன் ரூபா அதிகாக தேவைப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளாா்.
அமைச்சரின் பத்திரத்திற்கு ஆதரவாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்து தெரிவித்துள்ளார். புரட்சிகரமான இந்த வேலைத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவேண்டும். என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜப்பான், கொரியா, சிங்கப்பூர் ஆகியநாடுகளில் இத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச் சர்கள் பலரும் தெரிவித்துள்ளனா்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனா திபதி ஏனைய நாடுகளில் அமுலில் உள்ளது என்பதற்காக எமது நாட்டில் அதனை அமுல்படுத்த முடியாது. அங்கு நடைபெறுகின்ற விடயங்கள் இங்கு நடைபெறவில்லை. இத் திட் டத்திற்கு உடனடியாக உடன்பட முடி யாது. அடுத்தவாரம் இந்த விடயம் தொடர்பில் இறுதி முடிவு எடுப்போ மெனத் தெரிவித்துள்ளாா்.