கட்சி செயலாளர்களை இன்று சந்திக்கிறார் மஹிந்த தேசப்பிரிய.!
சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக் கும் அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற வுள்ளது.
காலம் தாழ்த்தப்பட்டு வருகின்ற மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் என்பன குறித்து இச் சந்திப்பில் விஷேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
இச் சந்திப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவிக்கையில், சந்திப்பிற்கு சகல கட்சிகளினதும் செயலாளர்களுக்கும் கட்சி முக்கியஸ்தர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள அதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மாகாண சபைகளுக்கான ஆயுட்காலம் நிறைவடைந்து ஒரு வருடத்தைக் கடந்துள்ளது. அத்தோடு அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களைக் காரணம் காட்டி மாகாண சபைத் தேர்தல்களை மேலும் காலம் தாழ்த்துவதற்கான முயற்சிகள் இடம்பெறலாம்.
இது குறித்து கவனம் செலுத்தியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு கட்சி செயலாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களை அழைத்து கலந்துரையாட தீர்மானித்துள்ளது. இந்த தேர்தல்களை நடத்துவதில் காணப்படுகின்ற சட்ட சிக்கல்கள் குறித் தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியில் அனைத்து பிரதேச செயலகங்களுக்கூடாக வாக்காளர் பெயர்பட்டியல் மீள்திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். அதாவது வாக்காளர்களை பதிவு செய்வதில் பாரிய சிக்கல்கள் உள்ளன. எனவே இதிலுள்ள நெருக்கடிகளைக் குறைத்துக் கொள்வதற்காக கட்சிகளிடம் உதவிகள் கோரப்படவுள்ளன.
அதாவது ஒவ்வொரு கட்சிக்கும் உரிய தொகுதிகள் மூலம் இவ்வாறு உதவி கோருவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தோடு மாகாண சபைகள் அமைத்தல் தொடர்பிலும் சில பிரச்சினைகள் உள்ளன. இது குறித்தும் ஆராயப்படவுள்ளது. அரச அதிகாரிகள் வாக்களிக்கும் தபால் வாக்கு முறைமை விஸ்தரிக்கப்பட வேண்டியது தற்போது அவசியமாகியுள்ளது.
அதாவது அரச திணைக்களங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் வைத்தியத்துறை சார்ந்தவர்களை கருத்திற்கொண்டு இந்த விடயத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது. தேர்தல்கள் நடைபெறும் காலங்களில் இடம்பெறும் மோசடிகளை கண்காணிப்பதற்கு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும் அதில் திருப்தியற்ற நிலைமை உள்ளது.
எனவே வாக்களிப்பின் போது தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து நேரடி கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது. இது குறித்தும் கட்சி செயலாளர்களின் அபிப்பிராயங்கள் பெறப்படும். பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து பரவலாகப் பேசப்பட்டாலும் அது நடைமுறையில் சாத்தியப்படுவதாகத் தெரியவில்லை.
எனவே எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் நூற்றுக்கு 25 வீதம் பெண் பிரதிநிதித்துவம் கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு, இதற்கு சகல அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேர்தல் கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மாகாண சபைத்தேர்தலை நடத்துவதற்கு கட்டளை பிறப்பிக் கப்படுமாக இருந்தால் அதனை நடத்த முடியும் என்று தெரிவித்துள்ளாா்.