இராணுவ சீருடை, வாள்களுடன் ஒருவர் கைது!
மொறட்டு - கல்கிஸ்ஸ பகுதியில் குண்டுத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதி களுடன் இணைந்து செயற்பட்டுள்ளார் எனும் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொறட்டுவ பொலிஸ் பிரிவிற் குட்பட்ட சொய்சாபுர - குடியிருப்பு தொகுதியில் நேற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற் கொண்ட சோதணை நடவடிக்கை யின் போதே இவர் கைதுசெய்யப்பட் டுள்ளார்.
சொய்சாபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய முகமது நிசார் ஹகமட் இம்ரான் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து இராணுவத்தினரின் சீருடைகளும், வாள்கள் , தொலைப்பேசி, ட்ரோன் கெமரா, மடிக்கணணி உட்பட மேலும் பல கமராக்களும் மீட்கப்பட்டுள்ளன.