பௌத்த பீடங்களின் கோரிக்கை: மல்வத்து தேரருடன் பேச்சு நடத்துவதாக - பிரதமர்
முஸ்லிம் பிரதிநிதிகள் தொடர்பில் பௌத்தபீடங்களின் தேரர்கள் விடுத்துள்ள கோரிக்கையுடன் நாங்கள் இணைந்து கொள்கின்றோம். அவ்வாறு கோரிக்கை விடுத்தமைக்காக நன்றி தெரிவிப்பதுடன் மல்வத்து பீடத்தின் தேரர் நியங்கொட விஜிதசிறியை சந்தித்து இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளாா்.
இன ரீதியில் நாங்கள் பிரிந்து செயற்படக்கூடாது. சுதந்திரத்தின் பின்னர் முஸ்லிம் பிரதிநிதிகளும் அங்கம் வகித்தனர். புலிகளின் யுத்த காலத்திலும் முஸ்லிம் அமைச்சர்கள் அங் கம் வகித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் ஆளும் கட்சி பின்வரிசை பாராளு மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் மற்றும் அதன் பின்னர் முஸ்லிம் அமைச்சர்கள் பதவியை இராஜினாமா செய்தமை என்பன ஆரோக்கியமான நிலைமைகள் அல்ல. இது தொடர்பில் நான்கு பௌத்த பீடங்களும் முன்வைத்த கோரிக்கையுடன் நான் முழுமையாக இணைந்து கொள்கின்றேன்.
இன ரீதியில் பிரிந்து செயற்படுவது ஆரோக்கியமான செயற்பாடாக அமையாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டின் அனைத்து இன மக்களும் இணைந்து செயற்பட்டனர். அவ்வாறான ஓர் ஒற்றுமை இதற்கு முன் னர் இருந்ததில்லை.
அந்த ஒற்றுமையை வைத்து எதிர்கால பயணத்தை முன்னெடுக்க நாங்கள் திட்டங்களைத் தயாரித்தோம். எனினும் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் அதனால் மேலெழும்பிய இனவாதம், முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியமை என்பன காரணமாக முஸ்லிம் மக்கள் தூர விலகிச் சென்றுள்ளனர்.
இது நாட்டுக்கு ஒரு சிறந்த நிலைமை அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த வாரம் ஓர் இனவாதச் செயற்பாடு இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பயங்கரவாத தாக்குதலின் பின்னர் சந்தேக நபர்களைக் கண்டு பிடிக்க விரைவாக நடவடிக்கை எடுத்திருந்தோம்.
சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. எனினும் ஒரு சிலர் அதனை முறியடித்துச் செயற்பட்டனர். குளியாப்பிட்டி பிரதேசத்தில் ஓர் இனவாத செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. அதேபோன்று கடந்த வாரமும் ஓர் இனவாதச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
பிரதேச மட்டத்திலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. காரணம் நாட்டில் அமைதி நிலவுவதையும் ஐ.எஸ். பயங்கர வாதம் கட்டுப்படுத்தப்படுவதையும் இனவாதிகள் விரும்பவில்லை. பௌத்தபீடங்களின் தேரர்கள் விடு த்த கோரிக்கையுடன் நாங்கள் இணைந்துகொள்கின்றோம்.
அவ்வாறு இணைந்தமைக்காக நன்றி தெரிவிக்கின்றோம். இன ரீதியில் நாங் கள் பிரிந்து செயற்படக் கூடாது. சுதந்திரத்தின் பின்னர் முஸ்லிம் பிரதிநிதிக ளும் அங்கம் வகித்தனர். புலிகளின் யுத்த காலத்திலும் முஸ்லிம் அமைச்சர் கள் அங்கம் வகித்தனர்.
இது தொடர்பில் ஒரு பரந்துபட்ட கலந்துரையாடலை எதிர்பார்க்கின்றோம். அத்துடன் மல்வத்து பீடத்தின் தேரர் நியங்கொட விஜிதசிறியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்க்கின்றேன். யாராவது இனவாதச் செயற்பாடு களை முன்னெடுத்தால் அதற்கு நாம் முகம்கொடுக்க ஆயத்தமாக உள்ளோம்.