டெய்லரின் அதிரடியுடன் வீழ்ந்தது பங்களாதேஷ்!
பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியல் நியூஸிலாந்து அணி இரண்டு விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் ஒன்பதாவது லீக் போட்டி நேற்றைய தினம் லண்டன் ஓவல் மைதானத்தில் மாலை 6.00 மணிக்கு கேன் வில்லியம்சன் தலைமையி லான நியூஸிலாந்து அணிக்கும் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிக்கிடையிலும் நடைபெற் றது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் நியூஸிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 49.2 ஓவர்க ளில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து, 244 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
பங்களாதேஷ் அணி சார்பில் சஹிப் அல்ஹசன் 64 ஓட்டத்தையும், மொஹமட் சைஃபுடின் 29 ஓட்டத்தையும், மொஹமட் மிதுன் 26 ஓட்டத்தையும், சவுமிய சர்க்கார் 25 ஓட்டத்தையும், தமிம் இக்பால் 24 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர்.
பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் மாட் ஹென்றி 4 விக்கெட்டுக்களை யும், டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுக்களையும், லொக்கி பெர்குசன், மிட்செல் சாண்ட்னர் மற்றும் கிரேண்ட்ஹோம் ஆகியோர் தலா ஒரு விக் கெட்டினையும் வீழ்த்தினர்.
245 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூ ஸிலாந்து அணி 47.1 ஓவரில் 8 விக்கெட்டுக்களை இழந்து பங்களாதேஷ் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கனை கடந்தது. நியூஸிலாந்து அணி சார்பில் ரோஷ் டெய்லர் மொத்தமாக 91 பந்துகளில் 9 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 82 ஓட் டத்தையும், கேன் வில்லியம்சன் 40 ஓட்டத்தையும், மார்டின் குப்டில் 25 ஓட் டத்தையும், கொலின் முன்ரோ 24 ஓட்டத்தையும், ஜேம்ஸ் நீஷம் 25 ஓட் டத்தையும் அதிகபடியாக பெற்றனர்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணிசார்பில் மெய்டி ஹசன், சஹிப் அல்ஹசன், மொஹமட் சைஃபுடின் மற்றும் ஹுசேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக் களையும் வீழ்த்தியுள்ளனா்.