தெரிவுக்குழு விசாரணைக்கு பிரதமர் ரணிலை அழைக்க தீர்மானம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன மற்றும் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர்களான சாகல ரத்னாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரை பாராளுமன்ற தெரிவுக் குழு வின் விசாரணைக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரி வுக்குழு உறுப்பினர்கள் பிரதமர் உள் ளிட்ட மேற்குறிப்பிட்ட அமைச்சர் களையும் விசாரணைக்கு அழைப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
தெரிவுக்குழுவில் சாட்சியமளிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விருப் பம் தெரிவித்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. விசாரணைக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கான தினம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
தெரிவுக்குழுவின் அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 26 ஆம் திகதி புதன் கிழமை நடைபெறவுள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக் கூடிய அல்லது அதில் தாக்கம் செலுத்தக்கூடியதாகக் கருதப்படும் வாக்குமூல பதிவுகளின் போது அதனை ஊடகங்களூடாக நேரடியாக வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஏனைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற தெரிவுக்குழு தெரிவித்துள்ளது. தெரி வுக்குழு விசாரணையின் வாக்குமூல பதிவுகள் அடுத்த மாதம் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, முழுமையான அறிக்கையை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.