Breaking News

சோமாலிய ஜனாதிபதி மாளிகை அருகே குண்டுவெடிப்பு - 11 பேர் பலி

சோமாலியாவில் ஜனாதிபதி மாளிகை அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப் பில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகியுள்ளனர்.


சோமாலியாவில் அல்-கொய்தாவின் ஆதரவுபெற்ற அல்-ஷபாப் பயங்கர வாதிகள் தாக்குதல்களை மேற் கொண்டு வருகின்றனர். குறித்த அல் - ஷபாப் பயங் கரவாதிகள் பொலிஸார், பாதுகாப்புப்படை வீரர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், சோமாலியாவின் தலைநகர் மொகாதீசுவில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகே உள்ள பொலிஸ் சோதனை சாவடியில் பொலிஸார் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, பயங்கரவாதிகள் வெடிகுண்டு கள் நிரப்பிய காரைச் சென்று பொலிஸாரின் சோதனை சாவடி முன்பு நிறுத்தி வெடிக்க செய்தனர்.

குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில், அங்கு நிறுத்தப் பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் தீக்கிரையாகின. குண்டுவெடிப்பில் சிக்கி 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 25 பேர் பலத்த காயமடைந்தனர்.

குண்டுவெடிப்பு நடைபெற்று சில மணி நேரத்தில் மொகாதீசுவில் உள்ள சர்வ தேச விமான நிலையத்துக்கு செல்லும் வீதியில் மற்றொரு கார் வெடிகுண்டு வெடித்தது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த இரட்டை கார் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு அல்-ஷபாப் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.