"முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியதை அரசியலாக்காதீா்கள்"
முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமை தொடர்பில் தவறான கருத்துக்களை முன்னிலைப்படுத்தி அரசியலாக்க வேண்டாம் என பாராளு மன்ற உறுப்பினர் எம்.எச். அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளாா்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியு தீனை பாதுகாக்கும் நோக்கில் எவரும் பதவி விலகவில்லை. ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இஸ்லாம் மதத்திற்கு முர ணாக தாக்குதலை மேற்கொண்ட அடிப்படைவாதிகளின் மிலேட்சத் தன மான செயற்பாட்டைய வன்மையாக கண்டிக்கின்றோம்.
முஸ்லிம் மக்கள் என்றும் தீவிரவாத்திற்கு துணை செல்லவில்லை. ஒரு தனிமனிதனின் செயற்பாட்டின் காரணமாக ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் உடலளவிலும், மனதளவிலும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார்கள். எனவே தேசிய நல்லிணக்கம் மீண்டும் சீர்பட வேண்டும்.
ஆகவே அரசாங்கமும் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை காண துரிதமாக செயற்படுதல் அவசியம். எமது தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறவே நாளை மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளதாகத் தெரி வித்துள்ளாா்.