Breaking News

இராணுவச் சிப்பாய் சடலமாக மீட்பு!

வெலிகம பகுதியின் ஆறொன்றில் பாய்ந்து இராணுவ சிப்பாய் ஒருவர் தற் கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனா். 

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெனிபிடிய - பொல்வத்துமோதர ஆற் றில் வீழ்ந்து நபரொருவர் நீரில்மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸா ருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக் கமைவாக பொலிஸார் விசாரணை களை முன்னெடுத்துள்ளனா்.

இதன் பின்னரம் பொலிஸாரும் கடற்படையின் சுழியோடிகளும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் காணாமல்போன நபர் உயி ரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.

சடலம் தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளில் வெல்லான பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய வன்னியாரச்சிகே சுபுன் புத்திக எனப்படும் இராணுவ சிப் பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசா ரணைகளை முன்னெடுத்துள்ளனா்.