காயமடைந்த யானைக்கு சிகிச்சையளிப்பு.!
வவுனியா பாலமோட்டைப்பகுதியில் கடந்த ஐந்து தினங்களாக காலில் காய மடைந்த யானை ஒன்று காட்டிற்குள் செல்வதற்கு சிரமத்தினை எதிர் கொண் டதினால் அக்கிராம மக்கள் அறிந்து பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பொலிசார் மேற்கொண்ட நடவடிக் கையினால் இன்று காலை கால்நடை வைத்தியரினால் காட்டு யானைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு காட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வவு னியா பாலமோட்டை குளத்திற்கு அருகே கடந்த ஜந்து தினங்களாக நட க்க முடியாமலிருந்த காட்டு யானை ஒன்றினை அவதானித்த அப்பகுதி கிராம மக்கள் கடந்த சனிக்கிழமை ஓமந்தை பொலிசாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் அங்கு சென்ற பொலிசார் வனஜீவராசிகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் உதவியுடன் யானையின் நிலைமைகளை அவதா னித்தபோது யானையின் காலில் காயமடைந்து காணப்பட்டுள்ளது. இதைய டுத்து இன்று காலை வடபிராந்திய வனஜீவாரிகள் திணைகளத்தின் கால்நடை வைத்திய அதிகாரி பா.கிரிதரன் அப்பகுதிக்குச் சென்று காட்டு யானைக்கு சிகிச்சையளித்துள்ளார்.
யானைக்கு கட்டுத்துப்பாக்கி வெடித்து காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தே கிக்கப்படுகின்றது. இந்நிலையில் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் இரண்டு மணித்தியாலயமாக மேற்கொண்ட மருத்துவச் சிகிச்சையின் பின்னர் காட்டு யானை காட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்றுள்ளது.