சீன-தெற்காசிய கூட்டுறவு ஒன்றிய 2 ஆவது மாநாடு நாளை ஆரம்பம்.!
சீன-தெற்காசிய கூட்டுறவு ஒன்றியத்தின் இரண்டாவது மாநாடு நாளை திங் கட்கிழமை சீனாவின் யுனான் பிராந்தியாத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இம்மாநாட்டின் ஆரம்ப தினமான நாளை, முதல் நிகழ்வாக சீன-தெற்கா சிய நாடுகளின் ஆளுநர்கள் மற்றும் மேயர்கள் ஆகியோர் பங்கேற்கும் அமர்வு நடைபெறவுள்ளது.
இதனையடுத்து நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை, சீன-தெற்காசிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் வணிக கூட்டுறவு அமர் வும், வறுமை ஒழிப்பு சம்பந்தமான கூட்டுறவு குறித்த அமர்வும், ஊடகத்துறையினர் பங்கேற்கும் அமர்வும் நடைபெறவுள்ளது.
அத்துடன் சீனா, இந்தியா, பங்களாதேஷ், மியன்மார் ஆகிய நாடுகளின் பங்கேற் புடன் 13ஆவது பிராந்திய கூட்டுறவு குறித்த அமர்வும் நடைபெறவுள்ளது. 12 ஆம் திகதி புதன்கிழமை வர்த்தக கண்காட்சி மற்றும் கலாசார வாரம் ஆகிய நிகழ்வுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.