பிரிவினை வாதத்தால் நன்மைப் பெற முயற்சித்தால் தோல்வி தான் கிடைக்கும் - பிரதமர்
பிரிவினைவாதத்தால் நன்மை பெற்றுக் கொள்வதற்கு முனையும் பிரிவினை வாதிகள் சிலர், ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வ தேச மாநாட்டு மண்டபத்தில் நடை பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரத மர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

மேலும் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இழப்பீட்டிற்கான அலுவலகத்தின் ஊடாக 250 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட்டுள்ள தாகவும் அவர் குறிப்பிட்டதோடு,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து வன்முறைகள் இரத்தம் சிந்தும் வகையில் பரவாமைக்கு நாட்டில் காணப்பட்ட நல்லிணக்கமே காரணம் என வும், இதனால் நாட்டு மக்களுக்கு தாம் நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்துள் ளாா்.
அத்தோடு நாட்டில் உள்ள மத்ரசா கல்வி நிறுவனங்கள் தொடர்பில் சட்டங்கள் இயற்றப்பட்டு வருவதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.