Breaking News

காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை - கிராம வாசிகள் கவலை

வவுனியா பாலமோட்டை குளத்தினுள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக காய மடைந்த நிலையில் காணப்படும் யானை தொடர்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

இவ்விடயம் தொடர்பாக தெரிய வருவதாவது,



வவுனியா பாலமோட்டை குளத்தி னுள் யானையொன்று வலது முன் னங் காலில் காயமடைந்த நிலையில் காணப்படுவதாக கிராம மக்களால் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது, எனினும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படாத நில யில் யானை குளப்பகுதியில் தொடர்ந்தும் காயத்துடன் காணப்படுகின்றது.

இதனையடுத்து கிராம மக்கள் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு மீண்டும் அறிவித்தல் வழங்கியதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் வன ஜீவ ராசிகள் திணைக்களத்தினால் யானையை பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

எனினும் அதற்கு சிகிச்சை அளிக்கப்படாமையினால் தொடர்ந்தும் யானை குளப்பகுதியில் காணப்பட்டு வருகின்றது. நடமாடுவதற்கு பெரும் சிரமத்திற் குள்ளாகியுள்ள இவ் யானை காட்டுப்பகுதிக்குள் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றமை தொடர்பில் கிராம வாசிகள் கவலை அடைந்துள்ளனா்.

இந் நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் ஒருவ ருடன் ஊடகவியலாளர் இது தொடர்பில் கேட்டபோது, காயமடைந்த யானை யினை சென்று பார்வையிட்டதன் அடிப்படையில் மருத்துவ சிகிச்சை அளிப்ப தற்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின் வைத்தியருக்கு அறிவித்தல் வழங் கப்பட்டுள்ளது.

எனினும் இதுவரை அவர் வருகை தராமையினால் சிகிச்சை அளிக்க முடி யாதுள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.