புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் தொகுப்பு.!
உள்நாட்டுச் செய்திகள்
- அடுத்த இரண்டு வாரத்தில் மரண தண்டனையை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
- ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதற்கான வர்த்த மானியில் போக்குவரத்து அமை ச்சர் கைச்சாத்திட்டுள்ளார்.
- தமிழகத்தின் விருதுநகர் மாவட் டத்தில் வசிக்கும் இலங்கை அக திகள் தமக்கு இந்திய குடியுரிமை வழங்குமாறு கோரிக்கை விடுத் துள்ளனர்.
- SOFA மற்றும் அமெரிக்க இராணுவம் இலங்கையில் நிலைகொள்ளும் உடன்படிக்கைகளை முற்றாக எதிர்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
- ஏப்ரல் 21 தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான மொஹம்மட் சஹ்ரா னின் மனைவி கல்முனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.
- கஞ்சிப்பானை இம்ரானை மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- கொழும்புத் துறைமுக நகரத்தை கொழும்பு நிர்வாக மாவட்டத்திற்குள் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
- ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- அரச உத்தியோகத்தர்களின் ஆடை தொடர்பிலான புதிய சுற்றுநிரூபத்தை வௌியிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
- நான்கு குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவில் கையொப்பமிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வௌிநாட்டுச் செய்திகள்
- மலேசிய பாடசாலைகளில் 75 மாணவர்களுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து அங்குள்ள 400 பாடசாலைகள் ஒரு வார காலத்திற்கு மூடப்பட்டுள்ளன.
- இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க இராஜாங்கச் செய லாளர் மைக் பொம்பியோவுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
- பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி லூய்ஸ் இனாசியோ லூலாத சில் வாவின் (Luiz Inácio Lula da Silva) பிணை கோரிக்கை அந்நாட்டு நீதிமன்றத் தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
- உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக அரையிறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதிபெற்றுள்ளது.