இத்தாலி விபத்தில் இலங்கையர் பரிதாபமாக பலி.!
இத்தாலி வெரோனா நகருக்கு அண்மையில் அமைந்துள்ள வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை பகல் நடைபெற்ற விபத்தில் இலங்கையரான புத்தளம், நாத்தாண்டியாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெரோனா நகரில் தொழில் செய்யும் நாத்தாண்டியா பிரதேசத்தைச் சேர்ந்த துஷார சஞ்ஜீவ பெரேரா (வயது 40) எனும் திருமணமான ஒருவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவராவார்.

விபத்தில் உயிரிழந்த நபர் செலுத்திச் சென்ற வாகனம் அதிவேக நெடுஞ்சாலையில் இயந்திரக் கோளாறு காரணமாக இடைநடுவில் நின்றுள்ளதால் வாகனத்திலிருந்து உயிரிழந்த நபர் இறங் கிச் செல்ல முற்பட்ட போது பின்னால் வந்த வாகனத்தில் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நபர் அவசர அம்பியூலன்ஸ் மூலம் வெரோனா பொர்கோ ட்ரென்தோ வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட போதிலும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பில் வெரோனா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.