ஆட்கடத்தல் தொடர்பான அமெரிக்க அறிக்கை : இலங்கையின் அந்தஸ்த்து தரமிறக்கம்
அமெரிக்கா இறுதியாக வெளியிட்டிருக்கும் ஆட்கடத்தல் தொடர்பான அறிக்கை இலங்கையின் அந்தஸ்த்தை தரமிறக்கம் செய்திருக்கிறது.
அமெ ரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் கடந்த வியாழக்கிழமை வெளியிடப் பட்ட அறிக்கையில் ஆட்கடத்தலை ஒழிப்பதற்கான குறைந்தபட்ச தராதரங் களை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிறைவு செய்யவில்லை.
ஆனால் அவ்வாறு நிறைவு செய்வ தற்கான திசையில் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டிருக்கி றது என்று கூறப்பட்டுள்ளது.
முன் னைய வருடங்களை விடவும் கூடு தலான அளவு ஆட்கடத்தல்காரர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டிருக்கி றார்கள்.
ஆட்கடத்தலால் பாதிக்கப்படக்கூடியவர்கள் பெருமளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆட்கடத்தலுக்கு எதிரான பெருமளவு பயிற்சிகளை நடத் துவதிலும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் சமூகத்திற்கு விழிப் புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் கூடுதல் அக்கறை காட் டப்பட்டுள்ளது.
ஐந்து வருடங்களில் முதற்தடவையாக ஆட்கடத்தல்காரர்கள் குற்றவாளி களாகக் காணப்பட்டுள்ளமையும் இதிலடங்கும். அமெரிக்கா ஆட்கடத்தல் தொடர்பாக விடுத்த முன்னைய அறிக்கையுடன் ஒப்பிடும் போது ஒட்டு மொத்த முயற்சிகளில் ஓர் அதிகரிப்பை இலங்கை அரசாங்கம் வெளிக் காட்ட வில்லை.
பல ஆட்கடத்தல்காரர்களை இலங்கை குற்றவாளியாகக் கண்ட அதேவேளை சிலருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையே வழங்கப்பட்டுள்ளது. ஆட் கடத்தல் குற்றச்செயல்களில் அரசாங்க அதிகாரிகள் உடந்தையாக இருப்பது பாரதூரமானதொரு பிரச்சினையாக உள்ளது.
அவ்வாறு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் அதிகாரிகள் தொடர்பிலும் புதிய விசாரணைகளை இலங்கை அரசு முன்னெடுக்கவில்லை. ஆட்கடத் தலில் அதிகாரிகளின் உடந்தை குறித்து பெருமளவு செய்திகள் வெளி வந்தும் கூட அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது அமெரிக்க அறிக்கையில் பிரத்யேகமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதனால் கண்காணிப்புப் பட்டியலில் இலங்கையை இரண்டாவது மட்டத் திற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தரமிறக்கம் செய்துள்ளது.