கல்லால் அடித்துக்கொல்ல எந்தவொரு பௌத்தரும் எண்ணமாட்டார் - மங்கள
எமது உயரிய தத்துவங்களான சமாதானம் மற்றும் அன்பு ஆகியவற்றை தலி பான் மயப்படுத்தும் (அடிப்படைவாதம்) முயற்சிகளுக்கு எதிராக அனைத்து உண்மையான பௌத்தர்களும் ஒன்றிணைய வேண்டும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார்.
எந்தவொரு மனிதனையும் கல்லால் அடித்து கொல்லவேண்டுமென எந்த வொரு பௌத்தரும் எண்ணமாட்டார். அவர் ஒரு கொள்ளையராக இருந்தா லும் கூட ஒரு பௌத்தர் அப்படி செய்ய மாட்டார் எனத் தெரிவித்துள் ளாா்.
நாட்டின் தற்போதைய நிலை தொடர் பில் நேற்று டுவிட்டர் பதிவொன்றைச் செய்திருந்த மங்கள சமரவீர அதில் இதனைக் கூறியிருந்தார். முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்களைப் பகிஷ்கரிக்க வேண்டுமென அஸ்கிரிய பீடத் தின் மகாநாயக்கர் வரக்காகொட ஞானரத்ன தேரர் கருத்துத் தெரிவித்து மூன்று தினங்களின் பின்னர் நிதி அமைச்சர் இவ்வாறான ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளாா்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட வரக்காகொட ஞானரத்ன தேரர் குறிப்பிடுகையில்;
முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளுக்குப் போகதீர்கள், அவர்கள் வழங் கும் உணவுகளை உட்கொள்ளாதீர்கள். முஸ்லிம்கள் எம் மீது அன்பு கொண்டிருக்கவில்லை.
முஸ்லிம்கள் எமது(சிங்கள) மக்களை நஞ்சூட்டி விட்டனர் என்பது எல்லோ ரும் அறிந்த உண்மையாகும். எமது மக்களை அழிப்பதற்கு அவர்கள் திட்டமிட்டு வந்துள்ளனர். ஆகவே பௌத்தர்கள் தம்மைத் தாமே பாதுகாப்பது முக்கியமானது.
முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளில் வாங்கும் உணவுகளை உண்பதால் இளம் சந்ததியினர் மலடுகளாக ஆகி விடுவர். மாத்தளையைச் சேர்ந்த ஒரு வைத்தியர் எமது நூற்றுக்கணக்கான சிறுவர்களை அழித்துவிட்டார். இத்தகைய வைத்தியர்கள் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்று இங்கு சிலர் பேசினார்கள்.
இது நடக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவ்வாறு தான் நடக்க வேண்டும். எமது மக்களில் எவராவது இவ்வாறு அவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) எதிராக தவறு செய்தால் நாம் துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்டிருப்போம். சமல் ராஜபக்ஷ இந்நாட்டில் எதிர்கால ஜனாதிபதி என்ற நல்ல செய்தி ஒன்றைக் கேள்விப்பட்டேன்.
இதனை நான் முதலில் கேள்விப்படவில்லை. ஆனால் இப்போது கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்தேன். நாட்டை மீளக் கட்டியெழுப்பவும் பாதுகாக்கவும் மயந்தவும் கட்சி மாற வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவும் கலந்துகொண்ட நிகழ்விலேயே தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.