தற்காலிகமாக மூடப்பட்ட பாராளுமன்ற வீதி!
பத்தரமுல்லைப் பகுதியில் பெலவத்தை சீனித்தொழிற்சாலை தொழிலாளர் கள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற வளாக வீதி மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்றம் தொடக்கம் பொல்துவ வரை யான வீதியே இவ்வாறு தற்காலிகமாக மூடப் பட்டுள்ளது.
இதனால் அப் பகுதியில் கடுமை யான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து கடமையில் ஈடுபடும் வாகன சாரதிகள் தற்காலிகமாக வேறு மாற்று பாதை களை பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட் டுக் கொண்டுள்ளனர்.