Breaking News

புத்­தரின் பாதை புரி­யாத பிக்­குகள் - மங்­கள

தம்மை கொல்ல வந்த தேவ­தத்­த­ருக்­குக்­கூட விகா­ரையை புத்­த­பெ­ருமான் தடை செய்­ய­வில்லை. அந்த உன்­ன­த­மான பாதையை புரி­யாத முட்டாள் தேரர் கள் துன்­பத்திலிருந்து நீங்கி சுகம்­பெ­றட்டும். கவ­லை­யி­லி­ருந்து நீங்­கட்டும் என்று அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்­கத்தில் இட்­டுள்ள பதி­வி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். கம்­பஹா மாவட்ட விகா­ரை­களில் அமைச்­சர்­க­ளான ராஜித சேனா­ரத்ன, மங்­கள சம­ர­வீர மற்றும் சதுர சேனா­ரத்ன எம்.பி. ஆகியோர் நிகழ்­வு­களில் கலந்­து ­கொள்­ளக்­கூ­டா­தென கம்­பஹா மாவட்ட சங்க சபை தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்ள நிலையில் அமைச்சர் இவ்வாறு  தெரிவித்துள்ளாா்.