2013 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை யாழில் 46 ரயில் விபத்து
2013 ஆம் ஆண்டு முதல் இன்றுவரையில் வவுனியாமுதல் யாழ்ப்பாணம் வரையிலான ரயில் பாதையில் 46 விபத்து சம்பவங்கள் நடந்துள்ளன.
அவற்றில் பொதுமக்கள் 36 பெரும் இராணுவத்தினர் 6 பேருமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர் என தமிழ் தேசி யக்கூட்டமைப்பு உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் பாராளுமன்றத்தில் நேற்று ரயில்வே ஊழியர்களின் போராட்டம் தொடர்பான சபை ஒத்தி வைப்பு வேலை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ் வாறு தெரிவித்துள்ளாா்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
2013 ஆம் ஆண்டு யாழ்,கிளிநொச்சி மாவட்டங்களுக்கான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வாறு ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
போக்குவரத்து இலகுபடுத்தப்பட்டுள்ளது. அதனை நாம் வரவேற்கின்றோம். ஆனால் 2013 ஆம் ஆண்டுக்கு முன்னர் ரயில் சேவைகள் இல்லாததன் கார ணமாக வீதிகள் இல்லாது,தண்டவாளங்கள் இல்லாது ரயில் பாதைகள் அழி வடைந்து, மக்கள் இந்த ரயில் பாதைகள் ஊடாக தமது போக்குவரத்து பாதை களை அமைத்து வாழ்ந்த சூழல், குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்ப டுகின்றது.
இது தொடர்பாக பல தடவைகள் இந்த பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறோம். அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளோம். ஆனால் இன்றுவரை எந்தப் பதில் களும் கிடைக்கவில்லை. ரயில்பாதைகள் அமைக்கப்படும்போது ரயில் கட வைகள் 1968 ஆம் ஆண்டுக்கு முதல் வர்த்தமானியில் வந்த அடிப்படையில் தான் அமைக்கப்பட்டுள்ளன.
இக்காலத்தின் பின்னர் கிராமங்கள் எழுச்சி பெற்றுள்ளன. மக்களின் வாழ்க்கை முறை மாறியுள்ளது. 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் யுத்தம் காரணமாக ரயில் பாதைகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களை மையமாக வைத்து ரயில் பாதைகள் அமைக்கப்படும்போது இந்த கடவைகளும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் இவ்வாறு எந்தக்கடவைகளும் திட்டமிட்டு அமைக்கப்படவில்லை. இந்தவிடயத்துக்கு பொறுப்பான அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா இருந்தபோது 2017-02-03 ஆம்திகதி விரிவான கடிதம் ஒன்றை அவருக்கு எழுதி யிருந்தேன்.
அதில் நான் எங்கெங்கே கடவைகள் அமைக்கப்பட வேண்டுமென குறிப்பிட் டிருந்தேன். அதுவரையில் எத்தனைபேர் இறந்துள்ளார்கள் என்றும் குறிப்பிட் டிருந்தேன். கடந்தவாரம் கூட நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் கிளிநொச்சியில் இராணுவ மருத்துவப்பிரிவின் வாகனம் ரயிலுடன் மோதியதில் 6 இராணு வத்தினர் இறந்துள்ளனர்.
இதன் பின்னர்தான் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் தலைமையில் கூட்ட மொன்று நடத்தப்பட்டு ரயில் கடவைகள் அமைப்பது தொடர்பாக பேசப்படு கின்றது. இதுவரை வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரை 46 விபத்து சம்ப வங்கள் நடந்துள்ளன.
இந்த ரயில் பாதையில் இன்றுவரை பொதுமக்கள் 36 பேர்வரையில் ரயிலுடன் மோதி இறந்துள்ளனர். இராணுவம் இறந்தால் மட்டும் உயிராக கருதக்கூடாது. இந்த 36பேர் இறந்தபோது கவனத்தில் எடுக்கப்படாத விடயம் இப்போதாவது கவனத்தில் எடுக்கப்படுவதனை நான் முதலில் பாராட்டுகின்றேன்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 16 ரயில் கடவைகள் அமைக்கப்பட வேண் டும். இது தொடர்பில் பல தடைவைகள் குறிப்பிட்டும் கருத்தில் எடுக்கப்பட வில்லை. அத்துடன் முன்னாள் போராளிகளிலிருந்து போரினால் கல்வி கற்க முடியாத பலர் இந்த மாவட்டத்திலுள்ளனர்.
இவர்களை ரயில் கடவை காப்பாளர்களாக நீங்கள் நியமிக்க முடியும். அவர்க ளுக்கு தொழிலும் கிடைக்கும். இதன் மூலம் உயிர்களைக் காப்பாற்றவும் முடி யும்.
இது தவிர கிளாலியிலிருந்து காங்கேசன்துறை வரையில் 23 ரயில் கடவைகள் அமைக்கப்பட வேண்டியுள்ளது. இதனைக்கருத்தில் எடுத்தால் இனி ஏற்படப் போகும் உயிரிழப்புக்களைத் தவிர்க்க முடியுமெனத் தெரிவித்துள்ளாா்.