நாடு பிரிவதை தடுக்க அதிகாரப் பகிர்வே ஒரே வழி - சம்பந்தன்
அன்றைய கண்டியத் தலைவர்களின் கோரிக்கையை நாங்கள் அப்போது ஆதரிக்கவில்லை. அவ்வாறு ஆதரித்திருந்தால் இப்பிரச்சினை எப்போதோ தீர்ந்திருக்கும். தமிழ் மக்கள் பெரும்பான்மைத் தலைவர்களை நம்பினார்கள். அதன் காரணமாகத்தான் பூரணமான சுதந்திர ஆட்சியைக் கேட்டார்கள்.
ஆட்சியில் தொடர்ந்து இருந்து வந்த பேரினவாத தலைவர்கள் மொழி, காணி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்ற காரணிகளில் எம்மத்தியில் வேற்றுமையை ஏற்படுத்தி இன்று தமிழர்கள் தனி நாடு கேட்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளாா்.
அண்மைக் காலமாக ஒரு அரசியல் தீர்வைக்காண நாம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டோம். அதில் கணிசமான முன்றேத்தையும் கண்டோம். அது முடிவுக்குவரவில்லை. ஆகவே இந்த விடயங்களை மக்கள் உணரவேண்டும். அதற்கு ஊடகங்கள் இந்த விடயங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும்.
நாடு பிரிவதை தடுப்பதற்கு ஒரே ஒரு வழி அதிகாரப் பகிர்வேயாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நேற்று மாலை திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தினால் ஊடகவியலாளர்களின் தகவலடங்கிய நூலொன்று வெளியிடப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சம்பந்தன் இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் குறிப்பிடுகையில், எமது நாடு இன்று கடன் சுமையில் மூழ்கியுள்ளது. எமது நாட்டின் வருமானத்தைக்கொண்டு நாம் முன்னேற முடியாத நிலமைக்குத்தள்ளப்பட்டுள்ளோம்.
இந்நிலைமைகளுக்கு காரணமாக அமைந்துள்ளவை எமது நாட்டில் நிலவும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையின்மையேயாகும் இவ்வாறான நிலைமையில் இருந்து இந்த நாடு மீள்வதற்கு ஊடகங்களும் சிறந்த முறையில் பங்காற்ற வேண்டும்.
தமிழ் ஊடகங்கள், சிங்கள ஊடகங்கள் மக்கள் மத்தியில் உண்மை நிலைவரங்களை கொண்டு செல்ல வேண்டும். உண்மைக்குப் புறம்பானவற்றை கொண்டு செல்லக்கூடாது. ஊடகங்கள் உண்மை நிலைமைகளை மக்களுக்கு கொண்டு செல்லுகின்ற போது அவர்கள் தமது நாட்டின் எதிர்காலம் தொடர்பாக தீர்மானங்களை சிறந்த முறையில் எடுப்பார்கள்.
ஒரு நாடு சிறந்த ஜனநாயக நாடக திகழ்வதற்கு, நாட்டின் இரண்டு அமைப்புக் கள் மிகவும் சுதந்திரமான வகையில், இயங்க வேண்டும். அதில் ஒன்று முக்கியமாக நீதித்துறையாகும். மற்றையது ஊடகத்துறையாகும். இவ்விரு துறைக ளும் சிறந்த முறையில் சுதந்திரமாக இயங்குமாக இருந்தால் அந்த நாட்டின் ஜனநாயகம் பேணிப் பாதுகாக்கப்படும்.
அதனடிப்படையில் ஊடகத்திற்கு மிகவும் பெரும் பங்குள்ளது. இதனைப்புரிந்து ஊடகவியலாளர்களும். ஊடகங்களும் செயற்படவேண்டும். நாட்டு மக்களின் ஒற்றுமையான செயற்பாட்டிற்கு ஊடகங்கள் பங்களிக்க வேண்டும். இன்று இந் நிகழ்வை மூவினத்தையும் சார்ந்த ஊடகவியலாளர்கள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து மிகவும் சிறப்பாக மிகவும் முன்மாதிரியாக நடத்துவதனைப் பார்க்கின்றபோது மிகவும் மகிழ்சியாக இருக்கின்றது.
சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் இந்த நாட்டில் ஒற்றுமையாக செயற்பட தமிழ்த்தலைவர்கள், சிங்களத்தலைவர்கள்,முஸ்லிம் தலைவர்கள் மிகவும் முன்மாதிரியாக செயற்பட்டார்கள். அவர்கள் ஒரு நாட்டு மக்களாக செயற்பட்டார்கள். இலங்கைத்தீவு அவரவர் கலாசார பண்பாட்டு ரீதியாக வெவ்வேறு பகுதிகளாக பிரிந்துள்ளது.
ஆனாலும் அந்நியர் ஆட்சியில் இருந்து விடுபட ஒன்றிணைந்து செயற்பட்டார் கள். அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் பூரண சுதந்திர ஆட்சியைக் கேட்டார்கள். கண்டியை மையமாகக்கொண்ட தலைவர்கள் பூரண சுயாட்சி கேட்டார்கள். அக் காலத்தில் தமிழ் மக்கள் நாட்டைப் பிரித்துக்கேட்க வில்லை.
அன்றைய கண்டியத் தலைவர்களின் கோரிக்கையை நாங்கள் அப்போது ஆதரிக்கவில்லை. அவ்வாறு அதரித்திருந்தால் இந்தப்பிரச்சினை எப்போதோ தீர்ந்திருக்கும் .தமிழ் மக்கள் பெரும்பான்மைத் தலைவர்களை நம்பினார்கள். அதன் காரணமாகத்தான் பூரணமான சுதந்திர ஆட்சியைக் கேட்டார்கள்.
ஆட்சியில் தொடர்ந்து இருந்து வந்த பேரினவாத தலைவர்கள் மொழி, காணி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்ற காரணிகளில் எம்மத்தியில் வேற்றுமையை ஏற்படுத்தி இன்று தமிழர்கள் தனி நாடு கேட்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இதனடிப்படையில் பல்வேறு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. அவை அனைத் தும் நிறைவேற்றப்படாத நிலைமை ஏற்பட்டதனால். துரதிஸ்ர வசமான பெரும் போர் நிலைமையும் ஏற்பட்டு அழிவுகளை,பொருளாதார அழிவுகளை இந்த நாடு சந்தித்தது.
1956 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமையினால் இந்நிலைமைகள் ஏற்பட்டன. ஆயினும் இந்தியாவின் பிரதம மந்திரி திருமதி இந்திரா காந்தியின் முயற்சியினால் எமது மக்கள் மத்தியில் ஒரு ஒற்றமைக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அது பின்னர் அவரது புதல்வரான ராஜீவ் காந்தியின் ஆட்சியிலும் தொடர்ந்தது. அதன்பயனாக தமிழ் மக்கள் அதனை பூரணமாக விரும்பாவிட்டாலும் இந்தியாவின் தலையீடு காரணமாக இந்திய, இலங்கை உடன்பாடு மூலம் 13ஆவது திருத்தச்சட்டம் மூலம் மாகாண முறைமை நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதனை பூரணமாக அமுலாக்க வேண்டும் என சர்வதேச சமூகமும் இந்தியாவும் கோரிநிற்கின்றன. அது பூரணமாக அமுலுக்கு வருவதன் மூலம் இந்த நாட்டில் ஓரளவேனும் ஒற்றுமை சாந்தி சமாதானம் நிலவுக்கூடிய சூழல் இருந்தது. ஆனால் அதுவும் கூட பூரணமாக அமுல்படுத்தாத நிலமை தொடர்கின்றது.
இந்த நாட்டில் உள்ள இனங்களுக்கிடையில் உள்ள பிணக்குகள் முடிவுக்குவர வேண்டும். அது முடிவுக்கு வராததன் காரணத்தினால்தான் இன்று பல பகுதிகளிலும் குழப்பகரமான நிலைமைகள் தொடருகின்றன. எம்மோடு சுதந்திரம் பெற்ற பல நாடுகள் இன்று சுபீட்சமாக வளர்ந்து வருகின்றன. ஆனால் எமது நாடு இன்னும் பெரும் நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றது.
பெரும் கடன் சுமை,பொருளாதார நெருக்கடி நாட்டில் முன்னேற்றமற்ற நிலை மைகள் தொடர்கின்றன. அண்மைக் காலமாக ஒரு அரசியல் தீர்வைக் காண நாம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டோம். அதில் கணிசமான முன்னேற் றத்தையும் கண்டோம். அது முடிவுக்குவரவில்லை.
ஆகவே இந்த விடயங்களை மக்கள் உணரவேண்டும். அதற்கு ஊடகங்கள் இந்த விடயங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும். நாடு பிரி வதை தடுப்பதற்கு ஒரே ஒரு வழி அதிகாரப்பகிர்வேயாகும். அதனை செய்வ தன் மூலமே இந்த நாடு சுபீட்சம் பெறும். இந்நிலைமையை ஏற்படுவதற்கு ஊடகங்கள் மக்களுக்கு உண்மை நிலைவரங்களை உணர்த்த முன்வர வேண் டும்.
விசேடமாக சிங்கள மக்களுக்கு ஏன் தமிழ்பேசும் மக்களுக்கும் கூட இந்த நாட் டின் நிலமைகள் தெளிவூட்டப்பட வேண்டும் அது உங்களது கடமையாகும் எனத் தெரிவித்துள்ளாா்.