மாவனெல்ல புத்தர் சிலைகளை தகர்க்கும் செயல் சஹ்ரானின் உத்தரவில் நடைபெற்றதாக - சி.ஐ.டி.
மாவனெல்லை நகரை அண்மித்த பகு திகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் அடித்து சேதமாக்கப்பட்ட சம்பவங்களானது, உயிர் த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிமின் உத்தரவுக்கு அமையவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சி.ஐ.டி. நேற்று மாவனெல்லை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்தது.
இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு நேற்று முற்பகல் மாவனெல்லை நீதிவான் உப்புல் ராஜகருணா முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே , குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பிரதான விசாரணை அதிகாரியான சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மாரசிங்க இதனை நீதிவானுக்கு தெரிவித்துள் ளாா்.
இதன்போது இந்த சிலை உடைப்பு விவகாரத்தை பூரணமாக நெறிப்படுத்தியுள்ள சஹ்ரான், அதனை முன்னெடுத்த சந்தேக நபர்களுக்கு 'நீங்கள் போய் சிலைகளை உடைத்துவிட்டு என்னிடம் வாருங்கள்' என கூறியுள்ளதாகவும் சி.ஐ.டி.யின் விசாரணை அதிகாரி நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
இச் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று மாவனெல்லை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே விளக்கமறியலில் உள்ள 14 சந்தேக நபர்கள் கடும் பாதுகாப்புக்கு மத்தியின் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டனர். இதனைவிட சி.ஐ.டி.யின் பிடியில் இந்த விவகாரம் தொடர்பில் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 சந்தேக நபர்களும் நேற்று விஷேட பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நீதிவானின் மேற்பார்வைக்காக ஆஜர் செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் இதுவரை கைதாகியுள்ள சந்தேக நபர்கள் 34 ஆவர். இதன்போது நீதிமன்றின் பாதுகாப்புக்காக மேலதிகமாக இராணுவம் வரவழைக்கப்பட்டிருந்தமையும் விஷேட அம்சமாகும். சந்தேக நபர்களை முன்னிலைப்படுத்திய பின்னர் விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் மாரசிங்க மேலதிக விசாரணை அறிக்கையை முன்வைத்து விடயங்களை தெளிவுபடுத்தினார்.
அதன்படி, புத்தர் சிலைகளை தகர்க்கும் இச் செயற்பாடுகள் பயங்கர்வாதி சஹ்ரானின் பூரண மேர்பார்வை மற்றும் உத்தரவின் கீழ் இடம்பெற்றுள்ளதாக சி.ஐ.டி. அதிகாரி நீதிமன்றுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இந்த விவகாரத்தில் கைதாகி விளக்கமறியலில் உள்ள இப்ராஹீம் மெளலவி என்பவரது வீட்டில் இந்த சிலை உடைப்புக்கான வகுப்புக்கள் சஹ்ரானினால் எடுக்கப்பட்டுள்ளதாகவும், வகுப்பின் முடிவில் சிலைகளை உடைத்துவிட்டு நீங்கள் மீண்டும் என்னிடம் வாருங்கள் என சஹ்ரான் அங்கிருந்த தனது சகாக்களுக்கு கூறியுள்ளதாகவும் சி.ஐ.டி. விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி நீதிமன்றுக்கு சுட்டிக்காட்டினார்.
இதனைவிட சிலை உடைப்பு விவகாரத்தில் சந்தேக நபர்கள் சிலர் சில நாட்களில் கைதான நிலையில் அந்த சந்தேக நபர்களை பிணையில் விடுவித்துக்கொள்ள சட்டத்தரணிகளுக்கு வழங்குகுமாறு கூறி சஹ்ரான் 20 இலட்சம் ரூபா பணத்தை இப்ராஹீம் மெளலவி எனும் சந்தேக நபருக்கு கொடுத்துள்ளமை தொடர்பிலும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அது குறி த்து மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அந்த அதிகாரி நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.
விளக்கமறியலில் உள்ள சந்தேக நபர்கள் 14 பேரையும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை மீள விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் உப்புல் ராஜகருணா, தடுப்புக் காவலில் உள்ள சந்தேக நபர்கள் 20 பேரையும் மீள நான்காம் மாடியில் தடுத்து வைத்து விசாரிக்கவும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி அவர்களை மேற்பார்வைக்காக மீள நீதிமன்ரில் ஆஜர் செய்யவும் சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டார்.
அத்துடன் இந்த விவகார விசாரணைகளின் போது கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை அழிக்க, கேகாலை அதிரடிப்படை கட்டளைத் தளபதிக்கும் இதன்போது நீதிமன்றம் உத்தர்வொன்றினை பிறப்பித்தது. கடந்த 2018 டிசம்பர் 25 ஆம் திகதி. அதிகாலை நேரத்தில் குருணாகல் மாவட்டம் பொதுஹர பொலிஸ் பிரிவின் கட்டுபிட்டிய கோணவல பகுதியில் அமையப்பெற்றுள்ள ஆலயம் ஒன்றில் இந்து கடவுள்களைக் குறிக்கும் உருவச்சிலைகள் அடையாளம் தெரியாதோரால் அடித்து நொறுக்கி சேதமாக்கப்பட்டன.
இச் சம்பவம் தொடர்பில் பொதுஹர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது கடந்த 2018 டிசம்பர் 26 ஆம் திகதி இதனையொத்த ஒரு சம்பவம் யட்டி நுவர - வெலம்பட பொலிஸ் பிரிவில் பதிவானது.
அதிகாலை 3.00 மணியளவில் வெலம்பட பொலிஸ் பிரிவின் லெயம்கஹவல பகுதியில் மூன்றரை அடி உயரமான புத்தர் சிலை அடையாளம் தெரியாதோரின் தாக்குதலுக்கு உள்ளானது. அத்துடன் அந்த மூன்றரை அடி உயரமான புத்தர் சிலை சேதப்படுத்தப்படும் அதே நேரம் அதனை அண்டிய பகுதியில் இருந்த மேலும் மூன்று சிறு சிலைகளும் சேதபப்டுத்தப்பட்டுள்ளன.
அதே தினம் அதிகாலை 4.00 ணியளவில் மாவனெல்லை - திதுருவத்த சந்தியில் உள்ள புத்தர் சிலையும் தாக்கி சேதபப்டுத்தப்பட்டுள்ளது. இதன்போது தான் இந்த சிலை உடைப்பு விவகாரத்தில் அல்லது இந்த அறுவறுக்கத்தக்க சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தடமும் கிடைத்திருந்தது.
இக்காலப்பகுதியில் மாவனெல்லை பகுதிகளில் நான்கு இடங்களில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன. அவை இரு பீ அறிக்கைகள் ஊடாக் அனீதிமன் றுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளன. மாவனெலெலை - திதுருவத்த சந்தியில் புத்தர் சிலையை தாக்க மோட்டார் சைக்கிளில் இருவர் வந்துள்ளனர்.
இவ்வாறு வந்ததாக கூறபப்டும் இருவரில் ஒருவரை பிரதேச வாசிகள் துரத்திப் பிடித்து மாவனெல்லை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அது முதல் இது குரித்த விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே தற் போது அவ்விடயத்தில் பல அதிர்ச்சியளிக்கும் விடயங்கள் வெளியாகியுள் ளன.