பங்களாதேஷ் - மே.இ.தீவுகள் இன்று மோதல்!
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 23 ஆவது போட்டியில் ஹோல் டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணியும், மோர்தசா தலைமை யிலான பாகிஸ்தான் அணியும் இன்று மோதவுள்ளன.
அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு டவுன்டானில் ஆரம்பமாகவுள்ளது.
இவ்விரு அணி களும் இதுவரை நான்கு போட்டியில் விளையாடி 3 புள்ளியுடன் (ஒரு வெற்றி, 2 தோல்வி, ஒரு முடி வில்லை) உள்ளன. எனவே இப் போட் டியில் வெற்றிபெற்ற அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பினை தக்க வைத்துக்கொள்ளும்.
கடந்த மாதம் நடந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை பங்களாதேஷ் தொடர்ச்சியாக மூன்று முறை வீழ்த்தியுள்ளது. அதே போல் சர்வதேச ஒருநாள் உலகக் கிணண அரங்கில் இதுவரை பங்களாதேஷ் அணி மேற்கிந்தியத்தீவுகள் அணியை தோற்கடித்ததும் இல்லை.