ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதற்கு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களை அரசாங்கம் பயன்படுத்தக் கூடாது:ஜீ.எல்.பீரிஸ்
ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதற்கான வாய்ப்பாக ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை அரசாங்கம் பயன்படுத்தக் கூடாதென்று பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளாா்.
தேர்தலைப் பிற்போடுவதற்கு முயற் சித்தல் அல்லது அரசாங்கத்தின் பத விக் காலத்தை நீட்டித்துக் கொள்வ தற்கு நடவடிக்கை எடுத்தல் என்பன ஜன நாயகத்தின் மீதான தாக்குதல் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறி யிருக்கின்றார்.
எனவே அரசியலமைப்பை மீறி தேர்தலைப் பிற்போடுவதற்கு நாங்கள் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை. மக்களின் ஜனநாயக உரிமைக்குக் குந் தகம் விளைவிக்கும் இத்தகைய செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் நினைத் தும் பார்க்கக் கூடாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளாா்.
ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களை தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று அரசியல்வாதிகள் பகிரங்கமாகக் கூறி வந்தாலும் கூட, இதனூடாக தத்தமது அரசியல் நோக்கங்களை மறைமுகமாக நிறைவேற்றிக் கொள் வதற்கு எவரும் முயற்சிக்கவில்லை என்றும் கூறமுடியாது.
இந்நிலையிலேயே குண்டுத்தாக்குதல்களை ஜனாதிபதித் தேர்தலைப் பிற் போடுவதற்கான கேடயமாகப் பயன்படுத்தக் கூடாது. இது தொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களைத் தொட ர்ந்து தற்போது நாட்டில் பாரிய சிக்கல் நிலையொன்று ஏற்பட்டிருக்கின்றது. மக்கள் வெகுவாக அச்சமடைந்திருக்கின்றார்கள்.
இந்நிலையிலிருந்து மக்கள் மீட்டெடுப்பதற்கு அவர்கள் மத்தியில் நம்பிக் கையைக் கட்டியெழுப்ப வேண்டும். அந்தவகையில் ஒட்டுமொத்த நாட்டை யும் மீளக் கட்டியெழுப்புவத்றகு அரசாங்கத்திடம் முறையான திட்டமிடலொ ன்று இருக்க வேண்டும்.
மக்களை பழைய நிலைக்கு திருப்புவதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கும் அதேவேளை, சர்வதேசத்துடனும் தொடர்புகளைப் பேணும் வகையில் மற்றொரு திட்டம் அவசியமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.