புதிய சட்டமா அதிபராக தப்புல டி லிவேரா பதவி ஏற்பு.!
பதில் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் புதிய சட்டமா அதிபராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
மேலும் எச்.எம்.காமினி செனெ விரத்ன உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூ ராட்சி அமைச்சின் செயலாளராகவும், கே.ஜீ.அசோகா அலவத்த ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலு வூட்டல் அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விடருந்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டாா்.