ஒருநாள் கிரிக்கெட்டில் மே.இ.தீவுகள் புதிய சாதனை
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியானது புதிய சாதனையொன்றை படைத்துள்ளது.
அயர்லாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இடையே முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் நேற்றைய தினம் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயர் லாந்து அணிகளுக்கிடையேயான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வுசெய்ய மேற்கிந் தியத்தீவுகள் அணி முதலில் துடுப் பெடுத்தாட களமிறங்கியது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோன் கேம் பெல் மற்றும் ஷெய் ஹோப் களமிறங்கினர். இந்த ஜோடி அயர்லாந்து பந்துவீச்சை அனைத்து திசைகளிலும் அடித்தாடியது. சிறப்பாக விளையாடிய இருவரும் முதலில் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர்.
இதனால், அந்த அணி விக்கெட் இழப்பின்றி ஓட்ட எண்ணிக்கை 100 ஐயும், 200 ஐயும், 250 ஐயும் கடந்தது. இதையடுத்து, இருவரும் அடுத்தடுத்து சதமும் அடித்தனர். இதனால், முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 300 ஓட்டங்களும் பெறப்பட்டது.
இருவரும் மேலும் அடுத்தடுத்து 150 ஓட்டங்களையும் கடந்தனர். இதன்மூலம், இந்த ஜோடி 48 ஆவது ஓவர் வரை முதல் விக்கெட்டை இழக்கவில்லை. எனினும் 48 ஆவது ஓவரை வீசிய மெக்கார்தி, ஒரே ஓவரில் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தார்.
அதனால் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 365 ஓட்டங்களை குவித்தது. கேம்பெல் மொத்தமாக 137 பந்துகளை எதிர்கொண்டு 15 நான்கு ஓட்டங்கள், 6 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 179 ஓட்டத்தையும். ஷெய் ஹோப் மொத்தமாக 152 பந்துகளை எதிர்கொண்டு 22 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்களாக 170 ஓட்டங்களை குவித்தார்.
இவர்களது இந்த ஆட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 381 ஓட்டங்களை குவித்தது. 382 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 34.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 185 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 196 ஓட்டங்களினால் தோல்வியைத் தழு வியது.
இதற்கு முன்னர் சிம்பாப்வே அணிக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியின் இமாம் உல்ஹக், பாஹர் சமன் இருவரும் இணைந்து முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 304 ஓட் டங்களை பெற்றிருந்தனர்.

இதுவே இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டியில் பெறப்பட்ட முதல் விக் கெட்டுக்கான அதிகூடிய ஓட்டமாக பதியப்பட்டிருந்தது. இந் நிலையில் மேற் கிந்தியத் தீவுகள் அணி அந்த சாதனையை முறியடித்துள்ளது.
இதேவேளை கடந்த 2017 ஆம் ஆண்டு மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக் கெட்டில் அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் பூணம் ரவுத் மற்றும் தீப்தி சர்மா இருவரும் முதல் விக்கெட்டுக்காக 320 ஓட்டங்களை குவித்தமையும் குறிப்பிடத்தக்கது.