பயிற்சி ஆட்டங்கள் இன்று ஆரம்பம் ; தென்னாபிரிக்காவை எதிர்கொள்கிறது இலங்கை!
10 அணிகள் கலந்துகொள்ளும் 12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் 30 ஆம் திகதி வியாழக்கிழமை இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந் நிலையில் இந்த உலகக் கிண்ணத் தொடரில் கலந்துகொள்ளும் அணிக ளுக்கிடையேயான பயிற்சிப் போட் டிகள் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள் ளது.
இப் பயிற்சிப் போட்டிகளில் ஒவ்வொரு அணிகளுக்கும் தலா இரு பயிற்சிப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இன்று இரு பயிற்சிப்போட்டிகள் நடைபெற வுள்ளன. அதன்படி மாலை 3.00 மணிக்கு இங்கிலாந்தின் பிரிஸ்டலில் ஆரம்ப மாகும் முதல் பயிற்சிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
இதேவேளை 3.00 மணிக்கு கார்டிப்பில் ஆரம்பமாகும் மற்றுமோர் பயிற்சிப் போட்டியில் தென்னாபிரிக்காவை இலங்கை அணி எதிர்கொள்கின்றது.