அமெரிக்கப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு!
அமெரிக்காவில் டென்வர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ள நிலையில் 8 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் கொலராடோவில் டென்வர் புறநகர் பகுதியில் ஸ்டெம் ஸ்கூல் ஹைலேண்ட் ரான்ச் என்ற பாடசலை உள்ளது. இங்கு அந்நாட்டு நேரப்படி நேற்று பகல் 2 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடைபெற்றதினால் காயமடைந்த 8 மாணவர்களின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பேர் இத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிஸார் அவர்களைப் கைது செய்துள்ளனர். இருவருமே அதே பாட சாலை மாணவர்கள் என்று கூறப்படுகிறது. குறித்த பாடசாலையில் 1850 மாண வர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
ஏற்கெனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு இப் பள்ளியிலிருந்து 7 மைல் தொலை வில் உள்ள மற்றொரு பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்திருப்பது குறிப் பிடத்தக்கது.