அவசரமாக தரை இறக்கிய விமானம் தீப்பற்றியதில் 41 பேர் பலி
ரஸ்யாவில் விமானம் ஒன்று அவசரமாக தரை இறக்கியவுடன் தீப் பற்றி யதில் 41 பேர் உயிரிழந்துள்ளனா்.
ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இருந்து முர் மாஸ்கான் என்ற இடத்திற்கு சூப்பர் ஜெட் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 73 பயணிகள், 5 விமான பணியாட்கள் என மொத்தம் 78 பேர் பயணித்துள்ளனா்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்ட போது உடனடியாக விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டு மீண்டும் தரையிறங்க முய ற்சித்த வேளை போது எதிர்பாராத விதமாக தீ பிடித்து எரிந்துள்ளது.
விமானத்தில் பயணம் செய்தவர்களில் 37 பேர் உடனடியாக வெளியேற்றப் பட்டனர். எனினும் இவ் விபத்தில் 41 பேர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப் படுகிறது. 11 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படுமென்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தை யடுத்து, மொஸ்கோவுக்கு வரும் விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.