விடுதலையானார் ஞானசார தேரர்
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை யாகி வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகியுள்ளாா்.
நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நான்கு குற்றங்கள் தொடர்பில் விதிக்கப்பட்ட இந்த சிறைத் தண்டனையை 6 வருடங்களில் அனுபவிக்க வேண் டும் என அப்போதைய மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதியும் தற்போதைய உயர் நீதிமன்ற நீதியரசருமான ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு கட்டளையிட்டிருந்தது.
2016 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில் ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற தனக்கு சம்பந்தமே இல்லாத வழக்கொன்றில் ஆஜராகி நீதிமன்றின் கெளரவம் சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விடுத்தமை ஊடாக மன்றை அவமதித்தமை,
எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அதனை வழி நடத்திய அரச சிரேஷ்ட சட்டவாதி திலீப பீரிஸை முறையற்ற வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி திட்டி அவமானப்படுத்தியமை,
நீதிமன்றின் கட்டளைக்கு செவிசாய்க்காமை, நீதிமன்ற சுயாதீன தன்மைக்கு சவால் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் அரசியலமைப்பின் 105 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக சட்ட மா அதிபரால் ஞானசார தேரருக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
இந்த நான்கு குற்றச்சாட்டுக்களுமே சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி முதலாவது, இரண்டாவது குற்றங்கள் தொடர்பில் ஞானசார தேரருக்கு தலா 4 வருட கடூழிய சிறைத் தண்டனையையும் 3 ஆம் குற்றத்துக்கு 6 வருட கடூழிய சிறைத் தண்டனையையும் 4 ஆவது குற்றத்துக்கு 5 வருட கடூழிய சிறைத் தண்டனையுமாக மொத்தம் 19 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனை 6 வருடங்களில் அனுபவிக்கவும் இதன்போது நீதிமன்றம் உத்தரவிட்டது.
தண்டனையை அவர் அனுபவித்து வந்த நிலையிலேயே, பல தரப்பில் இருந் தும் ஞானசார தேரரை பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இந்நிலையில் கடந்த வார இறுதியில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்கு சிறை வைத்தியசாலையில் ஞானசார தேரருடன் கலந்துரையாடியிருந்தார்.
அதன்பின்னர் நேற்று முன் தினம் சிறைச்சாலையிடமிருந்து விஷேட அறிக்கை கோரி நேற்று அவரை விடுவிப்பதற்கான ஆவணங்களில் கை யெழுத்திட்டதுடன், அந்த ஆவணமும் சிறைச்சாலை ஆணையாளர் அலு வலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குறித்த ஆவணம் இன்று மாலை சிறைச்சாலை ஆணையாளருக்கு கிடைக் கப்பெற்றதன் பின்னரே ஞானசாரர் தேரரை வெலிக்கடை சிறைச்சாலை அதி காரிகள் விடுதலை செய்துள்ளனர்.
இந் நிலையில் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியேறிய ஞானசார தேர ரரை காண்பதற்காக பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர்களும், அவரது ஆதரவாளர்களும், ஊடகவியலாளர்களும் சிறைச்சாலைக்கு வெளியே காத்தி ருந்தமையும் குறிப்பிடத்தக்கது.