இந்தியப் பிரதமருடன் ஜனாதிபதி மைத்திரி இன்று சந்திப்பு.!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கை குழுவினரை சந்தித்துப் பேசவுள்ளார்.
இன்று காலை 10.50 மணியளவில் ஐதராபாத் இல்லத்தில் இச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி பெரும்வெற்றியீட்டியதை அடு த்து நரேந்திர மோடி நேற்று இரண்டாவது தடவையாகவும் பிரதமராக பதவியேற்றிருந்தார்.
பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்தார். ஜனாதிபதியுடன் இலங்கைக் குழுவில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதை அடுத்து ராஷ்ரபதி பவனில் நிகழ்வில் பங்கேற்ற வெளிநாட்டு தலைவர்களுக்கு விருந்துபசாரம் அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்தியத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதனையடுத்தே இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கைத் தூதுக் குழுவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசவுள்ளார். இச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை கட்டியெழுப்பவது தொடர்பிலும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்படவுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங் கைக் குழுவினர் இன்று பிற்பகல் புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகத் துக்கு விஜயமாகவுள்ளனா்.