Breaking News

கிளிநொச்சி பாரிய விபத்தில் நால்வர் காயம்!

கிளிநொச்சி நகரில் நள்ளிரவு 1.30 மணியளவில் நடைபெற்ற பாரிய விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து பாரிய அளவில் நடை பெற்றும் தெய்வாதீனமாக உயிரிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பளையிலிருந்து முறிகண்டி திசை நோக்கி பயணித்த ரிப்பர் வாகனமே இவ்வாறு வேகக் கட்டுப்பாட்டை இழ ந்து, கிளிநொச்சி நகரின் நீதி மன்றத் திற்கு அருகாமையில் ஏ9 வீதியில் உள்ள மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள் ளாகியுள்ளது.

விபத்து இடம்பெற்றபோது குறித்த ரிப்பர் வாகனத்தில் ஐவர் பயணித்துள் ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிசார் முன் னெடுத்துள்ளனா்.