Breaking News

யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செய லாளரை வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவளித்துள்ளாா்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளா கம் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டபோது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தின் அறையிலிருந்து தமிழீழ விடு தலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், மாவீரர்களின் ஒளிப் படங்கள் மற்றும் தமிழீழ வரைபடம் என்பன கைப்பற்றப்பட்டன.

அதனையடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலை வர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரும் இராணு வத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு எதிராக பயரங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது. இந் நிலையில் மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளரையும் இன்று இரவு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தியுள்ளனா்.

இதன்போது மாணவர் ஒன்றியத்தினர் சார்பில் சட்டத்தரணிகள் கேசவன் சயந்தன், கலாநிதி குமாரவேல் குருபரன், கனகரட்ணம் சுகாஷ் ஆகிய மூவரும் முற்பட்டனர்.