Breaking News

சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று.!

சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் இன்றாகும். இவ் வருடத்துக்கான பத் திரிகை சுதந்திரத்துக்கான சர்வதேச பட்டடியலில் இலங்கை 126 ஆவது இட த்தை பிடித்துள்ளதுடன் இந்தியாவை விட 14 ஆவது இடத்தில் முன்னிலை வகிக்கின்றது. 

1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை யின் பொதுச்சபை கூட்டத்தில் எடுக் கப்பட்ட தீர்மானங்களுக்கு ஏற்ப ஒவ் வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாம் திகதி சர்வதேச பத்திரிகை சுதந்திர தின மாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கொண்டாடப்படும் பத்திரிகை சுதந்திர தினத்தினமானது தேர் தல்கள் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றில் ஊடகங்களில் பங்களிப்பு எனும் பிரதான தொனிப்பொருளில் இடம்பெறுகின்றது.

இதேவேளை 2019 ஆம் ஆண்டுக்கான பத்திரிகை சுதந்திர தினத்தை முன் னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பும் விசேட நிகழ்வு களை ஏற்பாடு செய்துள்ளது.

பத்திரிகை சுதந்திரமாகவும் நாடுகளின் தர வரிசையில் முதல் பத்து இடங்க ளில் நோர்வே, பின்லாந்து, சவீடன், நெதர்லாந்து,டென்மார்க், சுவிஸ்லாந்து, நியூஸ்லாந்து, ஜமேய்க்கா, பெல்ஜியம் மற்றும் கொஸ்டாரிகா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த தர வரிசையில் இந்தியா 140 ஆவது இடத்தையும் இலங்கை 126 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.