Breaking News

மஹிந்த ராஜபக்ஷவே எதிர்க் கட்சித்தலைவர் - பிரதி சபாநாயகர் தெரிவிப்பு.!

மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்வதாக பிரதி சபாநாயகர் சற்றுமுன்னர் பாராளுமன்றில் 2019 ஆம் ஆண்டுக்கான முதலா வது பாராளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து இறுதித் தீர்மானிக்கப்பட்டதுடன், மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க் கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்வதாக பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளாா்.

எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்றை நிய மிக்க முடியாதெனவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மஹிந்த ராஜ பக்ஷவே எதிர்க்கட்சித் தலைவரெனவும் பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய பாராளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சிகளுக்கான நிதி யொதுக்கீடுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்படுமென எதிர்பாா்க்கப்படுகின் றது.