Breaking News

கோத்தா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாா் - கொழும்பு டெலிகிராவ்.!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக காணப்படுகின்ற போதிலும் அவர் தேர்தலில் போட்டியிடமாட்டார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித் துள்ளது.

தனது பிரஜாவுரிமையை இரத்துச் செய்யுமாறு கோரி அமெரிக்க அதிகா ரிகளிடம் விண்ணப்பித்துள்ளதினால் கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடமாட்டார் என ராஜபக்ச குடும்பத் தகவல்கள் தெரிவித்ததாக கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள் ளது.

நான் அறிந்த வரையில் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எதுவும் கோத்த பாய ராஜபக்சவிற்கு இல்லையென ஒருவர் தெரிவித்தார் என கொழும்பு டெலி கிராவ் தான் தேர்தலில் போட்டியிடுவேன் என கோத்தபாய பலரை நம்ப வைத் துள்ளார்.

வர்த்தகர்கள் அவரிற்கு நாளாந்தம் பெருமளவு பணத்தை வழங்குகின்றனர் இதன் காரணமாகவே கோத்தபாய ராஜபக்சவினால் கொழும்பில் ஆடம்பர வாழ்க்கை வாழமுடிகின்றது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய் வதற்காக வர்த்தகர்கள் தொடர்ச்சியாக பணத்தை வழங்குகின்றனர் என ராஜ பக்ச குடும்பத்தைச் சேர்ந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.