ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு எனின் மஹிந்த ராஜபக்ச காலத்திலேயே பெற்றிருக்கலாம்.!
ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என்றால் அதை மஹிந்த ராஜபக்ச காலத்தி லேயே பெற்றிருக்கலாமென வடக்கு மாகாணத்தின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில் நடைபெற்ற செய் தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
“சமஷ்டி அடிப்படையிலான தீர்வு சமஷ்டி குணாம்சங்களுடனான தீர்வு என்று கூட்டமைப்பு சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் காலி முகத்திடலில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என தெரிவித்துள்ளார்.
பின்னர் பேசிய சம்பிக்க ரணவக்க தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணக்கம் காணப்பட்டபடி ஒற்றையாட்சிக்குள் தீர்வு காணப்படும் என்றார். லக்ஷ்மன் கிரி யெல்லவும் ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்கிறார்.
ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு என்றால் யாரும் இந்த ஆட்சியை கொண்டு வந்திருக்க வேண்டிய தேவையில்லை. யாரும் தமது ஆதரவை இந்த ஆட் சிக்கு வழங்க தேவையுமில்லை.
காரணம் ஒற்றையாட்சிக்குள் தீர்வைக்காண இதற்கு முன்னரும் பலர் தயா ராக இருந்தனர். ஏன் மஹிந்த ராஜபக்சகூட ஒற்றையாட்சிக்குள் தீர்வைக் காணத் தயாராக இருந்தார்.
திஸ்ஸ விதாரண ஆணைக்குழுவில் நான் கூட அதை நிராகரித்திருந்தேன். ஐ.தே.க.விற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கிய பின்னர் கூட நீதியமைச்சர் கூறுகின்றார்- அரசியல் கைதிகள் என யாருமில்லையென. அப்போதும் கூட் டமைப்பினர் வாய்மூடி இருக்கிறார்கள்.
1948 ஆம் ஆண்டிற்கு பின்னர் கிடைத்த பேரம்பேசும் சக்தியை தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியாக பயன்படுத்தவில்லை. தமக்கிருந்த பேரம்பேசும் சக் தியை பாவித்து, தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளை கூட தீர்க்க வில்லை.
அரசியல்தீர்வை பெற்றுக்கொள்ள முடியவில்லையென்றால் அரசுக்கு வழங் கப்படும் ஆதரவை கூட்டமைப்பு மீளப்பெற வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.