Breaking News

அமைச்சரவை நியமன முரண்பாட்டிற்கு பொதுத் தேர்தலே தீர்வு - ஜி.எல். பீரிஸ்.!

நாட்டில் தற்போது தேசிய அரசாங்கம் என்பதில்லை. ஆகவே அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 விட அதிகரிக்க முடியாது. அதனை மீறி அமைச்சுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க அரசாங்கம் முயற்சித்தால் அது சட்ட விரோதமானது.

எனவே அமைச்சரவை நியமனங்க ளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு பொதுத் தேர்தலே நிரந்தர தீர்வாக அமையுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளாா். தற்போது தேசிய அரசாங்கமே நாட்டில் நிலவுவ தாக ஐக்கிய தேசியக் கட்சி பொய் தர்க்கங்களையே முன்வைத்து வருகின்றது. 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்த லில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் யானை சின்னத்தில் போட்டியிட்டதால் ஒரு போதும் அந்த கட்சியை தனிக் கட்சியாக கருத முடியாதெனத் தெரிவித் துள்ளாா்.

வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு வஜிரஸ்ராமய விகாரையில் இன்று செவ் வாய்க்கிழமை நடைபெற்றபோது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரி வித்துள்ளாா்.