Breaking News

சீனா, தாய்வானுக்கிடையே போர் அச்சம்.!

தாய்வான் சீனாவின் ஒரு பகுதி, அதனை நாங்கள் சீனாவுடன் இணைப்போம் என சீன நாட்டு ஜனாதிபதி சி ஜின்பிங் தெரிவித்துள்ளமையினால் சீனாவுக்கும் தாய்வானுக்குமிடையே போர் அச்சம் எழுந்துள்ளது.

சீன அதிபர் சி ஜின்பிங், தாய்வான் எங் கள் நாட்டின் ஒரு அங்கம். அதை சீனா வுடன் இணைப்பதே எங்களது ஒரே குறிக்கோள். தாய்வானும், சீனாவும் ஒரே நாடுதான்.

ஆகவே தாய்வான் தனியாக இயங்கு வதற்கு அனுமதிக்க முடியாது. அதை சீனாவோடு இணைப்பதற்கு தேவை யான முயற்சிகளை மேற்கொள்வோம். தேவைப்பட்டால் போர் நடவடிக்கை களையும் முன்னெடுக்கத் தயங்க மாட்டோமெனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய தாய்வான், எங்களது நாடு இறையாண்மை கொண்டது, யாரையும் கைப்பற்றி விட மாட்டோம் எனக் கூறியுள்ளது. இந் நிலையிலேயே இரு நாடுகளுக்குமிடையில் தற்போது போர் அச்சம் எழுந்துள் ளது.