Breaking News

திருவாரூர் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி - நாம் தமிழர் கட்சி அதிரடி.!

எதிர்வரும் 28 ஆம் தேதி நடைபெறவுள்ள திருவாரூர் தொகுதிக்கான இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளாா்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி இயற்கை எய்திய காரணத்தினால் காலியான திருவாரூர் தொகுதி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களின் தொகுதிகள்,

அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே போஸ் இயற்கை எய்தியதால் காலி யான திருப்பரங்குன்றம் தொகுதி உள் ளிட்ட 20 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் வரக்கூடுமென அரசியல் கட்சிகள் எதிர்பார்த்திருந்த வேளையில் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் எதிர்வரும் ஜனவரி 28 ஆம் தேதி இடைத்தேர்தல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து விருப்ப மனுக்களை பெறுதல், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட செயற்பாடுகளில் திமுக, அதிமுக உள்ளிட்ட அர சியல் கட்சிகள் மும்முரம் காட்டிவருகின்றன.

இந்த நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுமெனவும், ஜனவரி 10 ஆம் தேதி அங்கு கட்சி சார்பில் போட்டியி டும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படுமெனவும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பதவி உள்ளிட்டவற்றிற்காக நாங்கள் யாருடனும் சமரசம் செய்து கொள்ளப்போவதில்லை ; தமிழ்த்தேசிய அரசியலை இங்கு நாங்கள் விதைத் துக்கொண்டிருக்கும். நிச்சயம் ஒரு நாள் அது வீறுகொண்டு எழும் என தேர்தல் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு சீமான் பதிலளித்துள்ளாா்.