ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் மணிலா நகரைச் சென்றடைந்துள்ளாா்.!
இலங்கைக்கும் பிலிப்பைன்ஸூக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஆகி 58 வருடங்கள் கடந்துள்ள நிலை யில், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அரச முறை விஜயமொன்றை மேற்கொள் வதற்காக இலங்கை ஜனாதிபதி ஒரு வருக்கு விடுக்கப்பட்ட முதலாவது அழைப்பை நினைவுகூரும் வகை யில் அந் நாட்டுக்கான நான்கு நாள் அரச முறை விஜயமொன்றை மேற் கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மணிலா நகரின் நிநோயி அகினோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளாா்.
பிலிப்பைன்ஸ் அரசாங்கம் 1961ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பில் தூது வர் அலுவலகமொன்றை திறந்து வைத்ததைத் தொடர்ந்து, இலங்கைக்கும் பிலிப்பைன்ஸூக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகியுள் ளன.
1973ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தைப் பிரதி நிதித் துவப்படுத்தி பிலிப்பைன்ஸூக்கு விஜயமொன்றை மேற்கொண்டார். அதன் பின்னர் சர்வதேச மாநாடுகளில் பங்குபற்றுவதற்காக பல தலைவர்கள் பிலிப் பைன்ஸ் சென்றிருந்தாலும் பிலிப்பைன்ஸிடமிருந்து இராஜதந்திர மட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் முதலாவது சந்தர்ப்பம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால அரசியல், பொருளாதார மற் றும் கலாசார உறவுகளை புதிய துறைகளை நோக்கி விரிவுபடுத்தி இரண்டு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை கிடைக்கும் வகையில் ஒத்துழைப்பை மேம் படுத்துவது ஜனாதிபதியின் நோக்கமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.